» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் மின்வாகன சந்தை மதிப்பு ரூ.20 லட்சம் கோடியை தொடும்: நிதின் கட்காரி தகவல்

வியாழன் 4, டிசம்பர் 2025 5:33:58 PM (IST)

இந்தியாவில் 2030ம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களின் சந்தை மதிப்பு ரூ.20 லட்சம் கோடியை தொடும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மக்களைவையில் கூறியதாவது: தற்போது இந்தியாவில் 57 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024 - 25 மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. மின்சாரத்தில் இயங்கும் கார்களின் விற்பனை 20.8 சதவீதமும், டூவிலர்களின் விற்பனையும் 33 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையும் 18 சதவீதமும் அதிகரித்துள்ளது.

அதேபோல், பெட்ரோல், டீசல் கார்களின் கார்களின் விற்பனையும் 4.2 சதவீதமும், டூவிலர்களின் விற்பனையும் 14 சதவீதமும் மூன்று சக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் 6 சதவீதமும் அதிகரித்துள்ளது. 2030 ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்களின் சந்தை 20 லட்சம் கோடி ரூபாயை தாண்டும். ஆண்டுக்கு 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் 400 க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களின் ஸ்டார்ட் அப் சந்தையை உருவாக்கும் என கட்காரி கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory