» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒரே நாளில் 180 விமானங்கள் ரத்து: பயணிகளிடம் மன்னிப்பு கோரிய இண்டிகோ நிறுவனம்!

வியாழன் 4, டிசம்பர் 2025 5:49:08 PM (IST)



ஒரே நாளில் 180 விமானங்களை ரத்து செய்த இண்டிகோ நிர்வாகம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ பல்வேறு காரணங்களுக்காக இன்று ஒரே நாளில் 150-க்கும் அதிகமான விமானங்களின் சேவையை ரத்து செய்தது. மும்பை விமான நிலையத்தில் 86 விமானங்களும், பெங்களூருவில் 73 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் விமானப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

கடந்த நவம்பரில் மட்டும் ,1000க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்களின் சேவை ரத்துசெய்யப்பட்டது. ஊழியர்கள் வேலைநிறுத்தம், வான் போக்குவரத்து கட்டுப்பாடு கோளாறு மற்றும் விமானம், விமான நிலையத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு ஆகியவற்றால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமானங்கள் ரத்து தொடர்பாக இண்டிகோ நிர்வாகம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory