» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!

சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும், 2,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

விமானிகளுக்கு அதிக ஓய்வு கொடுக்கும் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டதன் காரணமாக, விமானிகள் பற்றாக்குறையால் இண்டிகோ விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. விமான சேவைகள் படிப்படியாக சரிசெய்யப்பட்டு வருவதாகவும் இண்டிகோ நிறுவனத்திற்கு போதிய அறிவுறுத்தல்களையும் கட்டுப்பாடுகளையும் வழங்கியுள்ளதாகவும் மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக இண்டிகோவில் 5% விமான சேவை குறைக்கப்பட்டது.

இந்நிலையில் டிச. 8 முதல் விமான சேவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் கடந்த 5 நாள்கள் விமான சேவை வழக்கம்போல இயக்கப்பட்டதாகவும் இண்டிகோ தகவல் தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட விமான சேவைகளின்படி, நேற்று 2,050 விமானங்கள் இயக்கப்பட்டு வெறும் 2 விமானங்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டதாகக் கூறும் இண்டிகோ, ரத்து செய்யப்பட்ட விமானங்களால் பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளும் உடனடியாக மாற்று விமானங்களில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தொடர்ந்து இன்றும்(டிச. 13) 2,050 விமானங்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளது.

பெருமளவிலான விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகப் பரவும் எந்தவொரு தவறான தகவல்களையும் நம்பி பயணிகள் ஏமாற வேண்டாம் என்றும் பயணிகள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory