» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜனநாயகன் திரைப்படத்தை தடுக்க நினைப்பதா? மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்!

செவ்வாய் 13, ஜனவரி 2026 5:20:12 PM (IST)



ஜனநாயகன்’ திரைப்படத்தை மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தடுக்க நினைப்பது தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்.” என்று காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருந்த விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை பிரச்சினையால் வெளியாகவில்லை. இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தற்போது ‘ஜனநாயகன்’ படத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "‘ஜனநாயகன்’ திரைப்படத்தை மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தடுக்க நினைப்பது தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல். தமிழக மக்களின் குரலை அடக்கி, நீங்கள் எப்போதும் வெல்ல முடியாது மோடி அவர்களே!” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று ஆஜரான தவெக தலைவர் விஜய்யிடம் அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.  இந்தச் சூழலில், விஜய்க்கு ஆதரவாக ராகுல் காந்தியின் குரல் பதிவாகியுள்ளது. கரூர் துயரச் சம்பவம் நடந்தபோதும் கூட விஜய்யிடம் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசினார் என்பது நினைவுகூரத்தக்கது. ஆனால் அந்தப் பேச்சு தொடர்பான விவரங்கள் ஏதும் கசியவில்லை. இந்தநிலையில் இன்று இந்தப் பதிவை ராகுல் பகிர்ந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.


மக்கள் கருத்து

ராகுல் குரல்Jan 14, 2026 - 03:47:32 PM | Posted IP 162.1*****

தமிழ்நாட்டில் விஜய் கூட கூட்டணி வைக்க முடிவு பண்ணியாச்சு, ஏற்கனவே காங்கிரசில் 10 க்கும் மேற்பட்ட கோஷ்டிகள் உள்ளது. எதோ விடியல் உதவியால் சில MLA க்கள் கிடைத்தார்கள். இனிமெல் விஜய் கூட சேர்ந்தால் ஒரு வார்டு உறுப்பினர் கூட கிடைக்காது.......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory