» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விமான விபத்து: மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழப்பு!

புதன் 28, ஜனவரி 2026 10:24:59 AM (IST)

விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார். 

மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் (66) சென்ற சிறிய ரக விமானம் இன்று காலை 8.45 மணியளவில் தொழில்நுட்பக் கோளாறால் பாராமதி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கிய போது விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. 

இந்தவிமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விமானத்தில் இருந்த 3 பயணிகளும், 2 விமானிகளும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிராவின் முக்கிய முகம்

மகாராஷ்டிராவின் தேவ்லாலி எனும் சிறிய ஊரில் 1959ஆம் ஆண்டு பிறந்த அஜித் பவார், 1982ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். 1991ஆம் ஆண்டு பாராமதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக வென்ற அஜித் பவார், அதனை தனது சித்தப்பா சரத் பவாருக்காக விட்டுக்கொடுத்தார்.

 அதே ஆண்டு பாராமதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிக் கண்ட அஜித் பவார், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாராமதி தொகுதியின் எம்.எல்.ஏவாகவும், மகாராஷ்டிரா அரசியலின் முக்கிய முகமாகவும் இருந்து வருகிறார்.  1991ஆம் ஆண்டு வேளாண் துறை இணை அமைச்சராக பொறுப்பேற்ற அஜித் பவாரின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இருப்பினும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்த அவர், ஒரு கட்டத்தில் சரத் பவாரின் அரசியல் வாரிசாக கருதப்பட்டார். பின்னர் சரத் பவாருடன் ஏற்பட்ட மோதலால் தனித்து செயல்பட்ட அவர், பின்னர் தேசியவாத கட்சியையும் அதன் சின்னத்தையும் தனதாக்கினார். 

மகாராஷ்டிரா வரலாற்றில் துணை முதலமைச்சராக நீண்ட காலம் பதவி வகித்த  ஒரே நபர் அஜித் பவார் என்பது  குறிப்பிடத்தக்கது. அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, அமித்ஷா உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory