» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அஜித் பவார் விமான விபத்து குறித்து உரிய விசாரணை : மம்தா பானர்ஜி வலியுறுத்தல்!
புதன் 28, ஜனவரி 2026 4:08:44 PM (IST)
அஜித் பவார் விமான விபத்து சம்பவம் குறித்து முறையான விசாரணை தேவை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அந்த மாநிலத்தின் துணை முதல்-மந்திரி அஜித் பவார் சிறிய ரக தனி விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாராமதி பகுதி அருகே தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில் அஜித் பவார் உள்பட, விமானத்தில் பயணித்த அவரது பாதுகாவலர்கள் 2 பேர் மற்றும் விமானிகள் 2 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. அஜித் பவாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாருக்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "அஜித் பவாரின் திடீர் மறைவால் அதிர்ச்சி அடைந்தேன். மராட்டிய துணை முதல்-மந்திரியும், அவரது சக பயணிகளும் இன்று காலை பாராமதியில் நடந்த ஒரு பேரழிவு தரும் விமான விபத்தில் உயிரிழந்தனர். நான் மிகுந்த இழப்பை உணர்கிறேன்.
அவரது மாமா சரத் பவார் உட்பட அவரது குடும்பத்தினருக்கும், மறைந்த அஜித் பவாரின் அனைத்து நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்து சம்பவம் குறித்து முறையான விசாரணை தேவை” என்று பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விமான விபத்து: மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழப்பு!
புதன் 28, ஜனவரி 2026 10:24:59 AM (IST)

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி : உச்சநீதிமன்றம்
செவ்வாய் 27, ஜனவரி 2026 5:28:13 PM (IST)

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி அறிவிப்பு
செவ்வாய் 27, ஜனவரி 2026 3:20:11 PM (IST)

நாடு முழுவதும் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: வங்கி சேவைகள் பாதிப்பு!
செவ்வாய் 27, ஜனவரி 2026 10:51:57 AM (IST)

டெல்லியில் 77-வது குடியரசு தின விழா கோலாகலம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றினார்..!
திங்கள் 26, ஜனவரி 2026 11:40:19 AM (IST)

தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு அங்கீகாரம்: மத்திய அரசின் பத்ம விருகள் அறிவிப்பு!
ஞாயிறு 25, ஜனவரி 2026 8:43:58 PM (IST)

