» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஒரே நாளில் டெலிவரி: அஞ்சல் துறை சார்பில் புதிய சேவை இன்று அறிமுகம்!
செவ்வாய் 17, மார்ச் 2026 12:13:32 PM (IST)
உலகின் மிகப் பழமையான அஞ்சல் அமைப்புகளில் ஒன்றான இந்திய அஞ்சல் துறை, நவீன காலத்திற்கு ஏற்ப தன்னை மெருகேற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தபால்களை 24 மணி நேரத்திற்குள் பட்டுவாடா செய்யும் 'அதிவிரைவு சேவை' இன்று முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
விரைவு தபால் (Speed Post), அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் மற்றும் பேமெண்ட் வங்கி ஆகியவற்றில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் அஞ்சல் துறை, தற்போது புதிய மைல்கல்லாக இந்தச் சேவையைத் தொடங்குகிறது. இதன் மூலம் முக்கியத்துவம் வாய்ந்த கடிதங்கள் மற்றும் அவசர ஆவணங்களை அனுப்பிய அடுத்த நாளே (24 மணி நேரத்திற்குள்) உரியவரிடம் சேர்க்க முடியும். குறிப்பாக, அரசுத் துறை சார்ந்த அவசரக் கடிதப் பரிமாற்றங்களுக்கு இச்சேவை பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அதிவிரைவுச் சேவை முதற்கட்டமாக சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு பெருநகரங்களில் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, படிப்படியாக நாட்டின் பிற பகுதிகளுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது.
தனியார் கூரியர் நிறுவனங்களுக்குப் போட்டியாக, மிகவும் குறைந்த கட்டணத்தில் இச்சேவை வழங்கப்பட உள்ளது. 24 மணி நேரச் சேவையுடன், 48 மணி நேரத்திற்குள் டெலிவரி செய்யும் 'பிரீமியம் டெலிவரி' சேவையும் அறிமுகமாகிறது. தனியார் நிறுவனங்களுக்கு இணையாக அஞ்சல் துறை மேற்கொண்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 93.84% தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 2-வது இடம்!
புதன் 13, மே 2026 4:07:50 PM (IST)

நீட் வினாத்தாள் கசிவு: இதுவரை 15 பேர் கைது - சிபிஐ விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!
புதன் 13, மே 2026 3:34:06 PM (IST)

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு: இறக்குமதி வரியை 15% ஆக உயர்த்தியது மத்திய அரசு!
புதன் 13, மே 2026 11:27:46 AM (IST)

அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி: பிரதமர் மோடி முன்னிலையில் அமைச்சரவை பதவியேற்பு!
செவ்வாய் 12, மே 2026 5:41:53 PM (IST)

வினாத்தாள் கசிவு எதிரொலி: நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து - சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!
செவ்வாய் 12, மே 2026 4:37:51 PM (IST)



"சோழா"புகழேந்திMar 17, 2026 - 01:53:29 PM | Posted IP 162.1*****