» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மேற்கு வங்கம், கேரளத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்!
செவ்வாய் 17, மார்ச் 2026 4:54:50 PM (IST)
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை நடுநிலையாக உறுதி செய்யும் வகையில் மேற்கு வங்கம் மற்றும் கேரளத்தில் பணியாற்றும் உயர்மட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 17, 2026) அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் ஏற்கனவே தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி மாற்றப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்டமாகப் பல முக்கியப் காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். தெற்கு வங்க மண்டல ஏ.டி.ஜி.பி-யாக ராஜேஷ் குமார் சிங் அவர்களும், வடக்கு வங்க மண்டல ஏ.டி.ஜி.பி-யாக கே. ஜெயராமன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அசன்சோல்-துர்காபூர், ஹவுரா, பராக்பூர் மற்றும் சந்தன்நகர் ஆகிய நான்கு முக்கிய நகரங்களுக்குப் புதிய காவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிராசாத், கூச்பெகார், பீர்பூம், முர்ஷிதாபாத், மால்டா உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்குப் புதிய காவல் கண்காணிப்பாளர்கள் (SP) நியமிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா மத்தியப் பிரிவு துணை ஆணையராக (DCP) ஸ்ரீகாந்த் ஜெகன்னத்ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் புதிய நியமனங்கள்:
கேரளாவில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கேயும் நிர்வாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆலப்புழை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியாக இன்பசேகர் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் பினராயி விஜயன் போட்டியிடும் தர்மடம் தொகுதி மற்றும் இரிக்கூர் தொகுதிகளுக்குப் புதிய தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக நேற்று (திங்கட்கிழமை), அஸ்ஸாம் மாநிலத்தில் 5 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தமிழ்நாட்டில் 4 மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களையும் தேர்தல் ஆணையம் மாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் எவரும் தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான வேறு எந்தப் பணிகளிலும் ஈடுபடுத்தப்படக் கூடாது என்று தேர்தல் ஆணையம் மாநில அரசுகளுக்குக் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 93.84% தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 2-வது இடம்!
புதன் 13, மே 2026 4:07:50 PM (IST)

நீட் வினாத்தாள் கசிவு: இதுவரை 15 பேர் கைது - சிபிஐ விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!
புதன் 13, மே 2026 3:34:06 PM (IST)

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு: இறக்குமதி வரியை 15% ஆக உயர்த்தியது மத்திய அரசு!
புதன் 13, மே 2026 11:27:46 AM (IST)

அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி: பிரதமர் மோடி முன்னிலையில் அமைச்சரவை பதவியேற்பு!
செவ்வாய் 12, மே 2026 5:41:53 PM (IST)

வினாத்தாள் கசிவு எதிரொலி: நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து - சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!
செவ்வாய் 12, மே 2026 4:37:51 PM (IST)


