» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பயங்கரவாதத்திற்கு இந்தியா அடிபணியாது: பஹல்காம் தாக்குதல் நினைவு நாளில் பிரதமர் அஞ்சலி
புதன் 22, ஏப்ரல் 2026 12:50:25 PM (IST)
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. பஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர்.பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், பஹல்காமில் கடந்த ஆண்டு இதேநாளில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவில் கொள்கிறேன். அவர்கள் ஒருபோதும் மறக்கப்பட மாட்டார்கள். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவில் வாழும் குடும்பத்தினருடன் நான் துணை நிற்கிறேன். இந்த துக்கத்தில் நாடு ஒன்றாக நிற்கிறது. பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது. பயங்கரவாதம் ஒருபோதும் வெற்றிபெறாது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெல்லியில் போலி ஈனோ, நெஸ்கஃபே தயாரித்த கும்பல் கைது: 1.5 லட்சம் பாக்கெட்டுகள் பறிமுதல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:15:54 PM (IST)

தேங்கி நிற்கும் பயங்கரவாத வழக்குகள்: விரைவு நீதிமன்றங்கள் அமைக்க உச்சநீதிமன்றம் நடவடிக்கை
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:33:31 PM (IST)

ராஜஸ்தான் சுத்திகரிப்பு ஆலையில் தீவிபத்து : பிரதமரின் திறப்பு விழா ஒத்தி வைப்பு!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:27:48 AM (IST)

தமிழக மக்கள் ஸ்டாலினுக்கு மீண்டும் ஒருமுறை வெற்றியைப் பரிசளிப்பார்கள்: கெஜ்ரிவால் நம்பிக்கை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 11:45:23 AM (IST)

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம்: இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 12.8% சரிவு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 10:55:14 AM (IST)

ஹார்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு – மத்திய அரசு கடும் கண்டனம்!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:34:00 AM (IST)

