» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் திட்டம் ஏதும் தற்போது இல்லை: மத்திய அரசு அறிவிப்பு

வெள்ளி 24, ஏப்ரல் 2026 11:13:14 AM (IST)

பெட்ரோல், டீசல் விலை உயர்த்​தும் திட்​டம் எது​வும் இல்​லை. மக்​கள் இடையே பீதியை ஏற்​படுத்​து​வதற்​காக இது​போன்ற தவறான தகவல்​கள் பரப்​பப்​படு​கின்​றன என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதால் ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் மூடி​யுள்​ளது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் விநி​யோகம் பாதிக்​கப்​பட்டு சர்​வ​தேச சந்தை​யில் கச்சா எண்​ணெய் விலை பேரலுக்கு 70 அமெரிக்க டாலரில் இருந்து 119 டாலர் வரை ஏற்ற இறக்​கத்​துடன் காணப்படுகிறது. இதனால் உலகின் பல நாடு​களில் பெட்​ரோல், டீசல் விலை அதி​கரித்​தது.

ஆனால், இந்​தி​யா​வில் மட்​டும் பெட்​ரோல், டீசல் விலை உயரவில்லை. இந்​நிலை​யில் சட்டசபை தேர்​தல் முடிந்த பிறகு பெட்​ரோல், டீசல் விலை லிட்​டருக்கு ரூ.25 முதல் ரூ.28 வரை உயர்த்​தப்​படலாம் என செய்திகள் வெளியாகி இருந்தன.

இதுகுறித்து பெட்​ரோலி​யம் மற்​றும் இயற்கை வாயு அமைச்​சகம் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட தகவலில், பெட்ரோல், டீசல் விலை உயர்த்​தப்​படும் என செய்திகள் வெளி​யாகி​யுள்​ளன. இது போன்ற திட்​டம் எது​வும் மத்​திய அரசிடம் இல்​லை. மக்​கள் இடையே பீதியை ஏற்​படுத்​து​வதற்​காக இது​போன்ற தவறான தகவல்​கள் பரப்​பப்​படு​கின்​றன.

கடந்த 4 ஆண்​டு​களில் பெட்​ரோல், டீசல் விலை உயர்த்​தப்​ப​டாத ஒரே நாடு இந்​தி​யா​ தான். சர்​வ​தேச சந்​தை​யில் ஏற்​பட்​டுள்ள கச்சா எண்​ணெய் விலை உயர்​வால், இந்​திய மக்​களை பாதுகாப்பதற்கு தேவை​யான நடவடிக்​கைகளை மத்​திய அரசும், பொதுத் துறை எண்​ணெய் நிறு​வனங்​களும் எடுத்​துள்​ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory