» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு: போலீசார் தீவிர விசாரணை!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 12:20:52 PM (IST)
மும்பையில், இரவு உணவாகச் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட பிறகு தர்பூசணி பழம் உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை பைதோனி பகுதியில் உள்ள முகல் கட்டிடத்தில் வசித்து வந்தவர் அப்துல்லா (40). இவரது மனைவி நஸ்ரீன் (35). இவர்களுக்கு ஆயிஷா (16) மற்றும் ஷைனப் (13) என இரு மகள்கள் இருந்தனர். கடந்த சனிக்கிழமை இரவு, அப்துல்லாவின் வீட்டிற்கு உறவினர்கள் 5 பேர் வந்துள்ளனர். அப்போது அனைவரும் சேர்ந்து இரவு 10:30 மணியளவில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.உறவினர்கள் சென்ற பிறகு, நள்ளிரவு 1 மணியளவில் அப்துல்லா மற்றும் அவரது குடும்பத்தினர் தர்பூசணி பழத்தைச் சாப்பிட்டுள்ளனர். அன்று அதிகாலை 5:30 மணியளவில், குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேருக்கும் திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது.
அருகிலுள்ள மருத்துவரிடம் முதலுதவி பெற்ற அவர்கள், பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி முதலில் இளைய மகள் ஷைனப் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களிலேயே தாய் நஸ்ரீன் மற்றும் மூத்த மகள் ஆயிஷா ஆகியோரும் உயிரிழந்தனர். அன்றைய தினமே இரவில் குடும்பத் தலைவர் அப்துல்லாவும் பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்துல்லாவுடன் பிரியாணி சாப்பிட்ட உறவினர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், சிக்கன் உணவிற்குப் பிறகு உட்கொண்ட தர்பூசணி பழம் 'ஃபுட் பாய்சனிங்' எனப்படும் உணவு நச்சாக மாறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும்" என போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஜே.ஜே. மார்க் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெலங்கானாவில் கிரேன் சரிந்து விபத்து: பிஹார் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழப்பு; 11 பேர் காயம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:36:14 PM (IST)

சகோதரியின் வங்கிப் பணத்தை எடுக்க சடலத்துடன் வந்த நபர்: ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 4:24:52 PM (IST)

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கு: ஐ.எஸ். பயங்கரவாதி முகமது ஷாரிக்கிற்கு 10 ஆண்டுகள் சிறை
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 4:18:39 PM (IST)

பாரத மாதாவுக்கு உங்கள் திறமை தேவை: அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 10:19:11 AM (IST)

கல்பாக்கம் அணு உலை சாதனை - இந்தியாவிற்குப் பெருமை: பிரதமர் மோடி புகழாரம்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:17:30 AM (IST)

டி.வி. பார்ப்பதில் தகராறு: மனைவி, மகள், பேத்திக்கு கத்திக்குத்து: மும்பை முதியவரின் வெறிச்செயல்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:11:48 AM (IST)


