» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேரளாவில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்? முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு!
திங்கள் 4, மே 2026 11:58:26 AM (IST)
கேரளாவில் 140 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
கேரளாவில் பெரும்பான்மைக்கு 71 இடங்கள் தேவை. காலை 11 மணி நிலவரப்படி காங்கிரசின் யுடிஎப் கூட்டணி 85 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் இடது முன்னணி கூட்டணி 42 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 1 இடத்தில் முன்னிலையில் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி பினராயி விஜயன் ஆட்சியை இழப்பார் என்று தெரிகிறது. காங்கிரஸ் ஆட்சி கேரளாவில் அமைய உள்ளது. அதேநேரம் காலை 11 மணி நிலவரப்படி, தர்மாடம் (Dharmadam) தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் 26779 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். அந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அப்துல் ரஷீத் அவரை விட 1090 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓடும் காரில் திடீர் தீ; சிசுவுடன் இளம்பெண் பலியான கொடூரம் - போலீஸ் விசாரணை!
ஞாயிறு 17, மே 2026 11:49:21 AM (IST)

மருத்துவ உலகில் பெரு வியப்பு: 5 நாட்கள் போராடி 4 குழந்தைகளை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்த பெண்!
சனி 16, மே 2026 5:24:58 PM (IST)

பிரதமரின் வேண்டுகோளை மீறி வாகன ஊர்வலம்: பாஜக பிரமுகர் மீது ம.பி முதல்வர் நடவடிக்கை
சனி 16, மே 2026 12:44:51 PM (IST)

போர் பதற்றங்களுக்கு இடையிலும் உயர்ந்த இந்தியாவின் அந்நியச் செலாவணி: ரிசர்வ் வங்கி அறிக்கை
சனி 16, மே 2026 12:21:02 PM (IST)

மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வி : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சாடல்!
சனி 16, மே 2026 8:32:00 AM (IST)

அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு!
வெள்ளி 15, மே 2026 12:44:50 PM (IST)


