» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரேஷன் கடைகளில் இனி உயர்தர அரிசி: குருணை அளவை குறைக்க மத்திய அரசு ஒப்புதல்!
வெள்ளி 10, ஜூலை 2026 8:31:55 AM (IST)

நாடெங்கிலும் உள்ள பொது விநியோகத் திட்ட ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், அதில் கலந்திருக்கும் குருணையின் அளவைக் கணிசமாகக் குறைப்பதற்கான புதிய நடைமுறையை மத்திய அரசு ஒப்புதலுடன் அமலுக்குக் கொண்டு வருகிறது.
இந்திய உணவுக்கழகத்தின் (FCI) மத்திய சேமிப்புக் கிடங்குகளில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 122.64 மில்லியன் டன் உணவுத்தானியங்கள் கையிருப்பில் உள்ளன. இமபெரும் கையிருப்பில் கோதுமை, சிறுதானியங்கள், நெல், அரிசி ஆகியவை அடங்கும். இங்கிருந்து அரிசி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரேஷன் கடைகள் மூலமாகப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
ரேஷன் அரிசியின் தரத்தை உயர்த்தும் நோக்கில், உடைந்த அரிசியின் அளவைக் குறைக்க மத்திய அரசு புதிய முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதற்காக ‘ஆர்.எம்.டி' (RMT) என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரக்குழு தனது அதிகாரப்பூர்வ ஒப்புதலை வழங்கியுள்ளது.
மத்திய அரசின் புதிய விதிமுறைகளின்படி அரிசி ரகங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:
பச்சரிசி: இதுவரை 25 சதவீதமாக அனுமதிக்கப்பட்டிருந்த குருணை அளவு, புதிய விதிமுறைப்படி 10 சதவீதமாகக் குறைக்கப்படும்.
புழுங்கல் அரிசி: இதுவரை 16 சதவீதமாக இருந்த குருணை அளவு, புதிய விதிமுறைப்படி 5 சதவீதமாகக் குறைக்கப்படும்.
ஆந்திரா பரிசோதனை வெற்றி!
முன்னதாக இத்திட்டம் ஆந்திர மாநிலத்தில் சோதனை அடிப்படையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள அரிசி ஆலைகளில் நெல் அரைக்கும்போது கிடைக்கும் உடைந்த அரிசியை (குருணை) ஆலைகளிடமே ஒப்படைக்கச் செய்து, அதற்குப் பதிலாக ஆலைகளுக்கு அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஆந்திராவில் இந்த நடைமுறை முழு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தரமான அரிசியை வழங்கும் நோக்கில் இப்புதிய திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராக்கெட், செயற்கைக்கோள் தயாரிப்பைத் தனியாரிடம் ஒப்படைக்க இஸ்ரோ முடிவு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:57:53 PM (IST)

இந்தியா உலகின் கப்பல் கட்டுமான மையமாக உருவாகும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:58:05 AM (IST)

வாழும் கலை அமைப்புக்கு விதித்த ரூ. 5 கோடி அபராதம் ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 22, ஆகஸ்ட் 2026 5:43:01 PM (IST)

ஏடிஎம்களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூல்? - எஸ்பிஐ நிர்வாகம் விளக்கம்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:00:19 PM (IST)

காவல் நிலையத்தில் ராகுல், பிரியங்கா தர்ணா: டெல்லியில் பெரும் பரபரப்பு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 4:36:39 PM (IST)

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட தமிழக அரசே இடத்தை தீர்மானிக்கட்டும்! - கேரள முதல்வர்
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:56:07 PM (IST)


