» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நீட் தேர்வு முறைகேடு, மாணவர்கள் மீது தடியடி: மோடி, அமித் ஷா பதவி விலக ராகுல் வலியுறுத்தல்!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:58:25 PM (IST)

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்குப் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லியில் பேரணி நடைபெற்றது. அனுமதியின்றி நடைபெற்ற இப் பேரணியைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்திய போது இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் தடியடி நடத்தியும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர். காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டன. நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:
"மாணவர்கள் போராட்டம் குறித்து விவாதிக்கச் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தோம். நாட்டின் கல்வி முறையும் தேர்வு முறையும் முற்றிலும் சீர்குலைந்துவிட்டன. தேர்வு முறையைக் கரையான் அரித்துவிட்டது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லாத சூழலில் போட்டித் தேர்வுகளும் சீர்குலைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத் துணை வேந்தர்களாக ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்கள் நியமிக்கப்படுகின்றனர். நியாயமான எதிர்காலத்தைக் கேட்கும் மாணவர்களின் குரல் ஒடுக்கப்படுகிறது.
நேற்றைய தாக்குதல் சம்பவத்திற்குப் பிரதமர் மோடி இதுவரை மன்னிப்பு கூடக் கேட்கவில்லை. முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்றுத் தர்மேந்திர பிரதானும், தாக்குதலுக்குப் பொறுப்பேற்று அமித் ஷாவும், அவர்களுக்குத் தலைமை வகிக்கும் பிரதமர் நரேந்திர மோடியும் உடனடியாகப் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்." எனத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராமர் கோவில் நன்கொடை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்! - உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 12:35:16 PM (IST)

விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு: ஆர்பிஐ முதல்கட்டச் சோதனை முயற்சி!
செவ்வாய் 21, ஜூலை 2026 11:36:15 AM (IST)

டெல்லியில் சிஜேபி போராட்டம் தீவிரம்: தர்மேந்திர பிரதானுடன் அமித் ஷா அவசர ஆலோசனை!
திங்கள் 20, ஜூலை 2026 5:10:43 PM (IST)

நீட், ராமர் கோவில் விவகாரங்களால் கடும் அமளி : நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!
திங்கள் 20, ஜூலை 2026 4:23:28 PM (IST)

இஸ்ரோவில் இருந்து 1,000 விஞ்ஞானிகள் திடீர் விலகல்: குலசேகரப்பட்டினம் ஏவுதள திட்டம் பாதிப்பு?
திங்கள் 20, ஜூலை 2026 11:22:25 AM (IST)

வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டுகள் சிறை! புதிய மசோதா தாக்கலாகிறது!
ஞாயிறு 19, ஜூலை 2026 1:30:06 PM (IST)


