» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மணமக்கள் முதல் பாதிரியார் வரை அனைவரும் இரட்டையர்கள்: கேரளாவில் அபூர்வ திருமணம்!

ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:37:07 AM (IST)

twinsWeddingKerala.jpg

கேரள மாநிலத்தில் இரட்டை சகோதரிகளை இரட்டை சகோதரர்கள் கரம்பிடித்த அபூர்வ திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தை நடத்தி வைத்த பாதிரியார்கள் மற்றும் திருப்பலி உதவி சிறுவர்களும் இரட்டையர்கள் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியில் உள்ள மெட்ரோபோலிட்டன் ஆலயத்தில் இந்த அரிய திருமணம் அரங்கேறியது. சங்கனாச்சேரியைச் சேர்ந்த குஞ்சுமான் தாமஸ் - ஜோமோள் தம்பதியரின் இரட்டை மகன்களான அகில் (29) மற்றும் நிகில் (29) ஆகிய இருவருக்கும், பத்தனம்திட்டா குளத்தூரைச் சேர்ந்த டோமிச்சன் - மேரிகுட்டி தம்பதியரின் இரட்டை மகள்களான மாகி மேரி (25) மற்றும் மரியா மேரி (25) ஆகியோருக்கும் திருமணம் நடைபெற்றது.

அதன்படி, மாகி மேரியை அகிலும், மரியா மேரியை நிகிலும் கரம்பிடித்தனர். இத்திருமணத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக, இவர்களின் திருமணச் சடங்குகளை இரட்டையர்களாகப் பிறந்த பாதிரியார்களான காஞ்சிரப்பள்ளியைச் சேர்ந்த ஆன்றோ மற்றும் அஜோ ஆகியோர் இணைந்து நடத்தி வைத்தனர்.

மேலும், திருமணத் திருப்பலியின் போது உதவி புரிந்த பீடச் சிறுவர்களான ஜெரோன் ஜேம்ஸ் மற்றும் ஜோகன் ஜேம்ஸ் ஆகியோரும் இரட்டையர்கள் ஆவர். மணப்பெண்களான மாகி மேரியும், மரியா மேரியும் சிறுவயதில் இருந்தே தங்களைப்போலவே இரட்டையர்களாக உள்ளவர்களையே திருமணம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளனர்.

அவர்களின் விருப்பப்படியே மணமகன்களும் இரட்டையர்களாக அமைந்தனர். தொடர்ந்து, திருமணத்தை நடத்தி வைக்கும் பாதிரியார்கள் மற்றும் உதவி சிறுவர்களையும் இரட்டையர்களாகவே இருக்க வேண்டும் எனத் தேடிப் பிடித்து மணப்பெண்களே தேர்வு செய்துள்ளனர்.

சரக்கு வணிகக் கப்பலில் பணிபுரிந்து வரும் அகில் - நிகில் சகோதரர்களுக்கும், தகவல் தொழில்நுட்பத் துறை () பொறியாளர்களாகப் பணிபுரியும் மாகி மேரி - மரியா மேரி சகோதரிகளுக்கும் நடைபெற்ற இந்த அரிய திருமண புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory