» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரயில்களில் தரமற்ற உணவு விநியோகம்: உணவு ஒப்பந்த நிறுவனங்களுக்கு ₹5.13 கோடி அபராதம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:20:07 PM (IST)

ரயில்களில் தரமற்ற உணவு விநியோகம் மற்றும் சுகாதாரமற்ற சமையல் பெட்டிகள் தொடர்பான புகார்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட உணவு ஒப்பந்த நிறுவனங்களுக்கு இந்திய ரயில்வே ரூ.5.13 கோடி அபராதம் விதித்துள்ளது.
இந்தியாவில் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சமையல் கூடங்களின் சுகாதாரம் மற்றும் கூடுதல் கட்டணம் வசூலிப்பு போன்ற புகார்கள் மீது ரயில்வே நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டது.
இதன் ஒரு பகுதியாக, விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட உரிமதாரர்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்தல் மற்றும் உணவு விநியோகம் செய்வோரைக் கருப்புப் பட்டியலில் சேர்த்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் வந்த புகார்களின் அடிப்படையில், நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.5.13 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்ததாவது: ரயில்வே அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்திய ரயில்வேயில் ஆண்டுதோறும் சுமார் 58 கோடி உணவுப் பொட்டலங்கள் பயணிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன.
இதில் உணவின் தரம் குறித்து வரும் புகார்களின் எண்ணிக்கை வெறும் 0.0008 சதவீதம் மட்டுமே. ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC) மூலம் இயக்கப்படும் முக்கிய சமையல் கூடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, சமையல் முறைகள் நேரலையாகக் கண்காணிக்கப்படுகின்றன.
பயணிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க, பி.ஓ.எஸ் (POS) இயந்திரங்கள், யு.பி.ஐ (UPI) மற்றும் கியூ.ஆர் (QR) குறியீடு மூலம் டிஜிட்டல் முறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. உணவுப் பொட்டலங்களின் தரம் மற்றும் எடையை உறுதி செய்யத் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்கள் முற்றுகைப் போராட்டம்: தடியடி, கண்ணீர் புகைக் குண்டுவீச்சு; போர்க்களமான சட்டமன்ற வளாகம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 8:36:38 AM (IST)

காவிரி நீரை உடனடியாகத் திறக்கக் கோரி தமிழக அரசு மனு: ஆகஸ்ட் 13-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:16:13 PM (IST)

டேட்டிங் செயலிகள் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி ரூ.6 கோடி பறித்த பெண்: அதிர்ச்சித் தகவல்கள்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 11:05:15 AM (IST)

இமாசலப் பிரதேசத்தில் மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி; 11 பயணிகள் காயம்
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:35:28 AM (IST)

யூபிஐ, ரூபே கார்டு பரிவர்த்தனைக் கட்டணம்: : மக்களவையில் மசோதா நிறைவேற்றம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:36:51 PM (IST)

நீட் வினாத்தாளை பேராசிரியர்களே விற்றனர்: சிபிஐ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:10:37 PM (IST)


