» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026: கேரளாவைச் சேர்ந்த காசியா லிஸ் மேஜோ மகுடம் வென்றார்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:52:44 AM (IST)

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 அழகிப் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த 19 வயதான காசியா லிஸ் மேஜோ வெற்றி பெற்று 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026' பட்டத்தைக் கைப்பற்றினார்.
ஜெய்ப்பூரில் உள்ள ஜீ ஸ்டுடியோஸில் நடைபெற்ற பிரம்மாண்ட இறுதிப் போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 52 பேர் போட்டியாளர்களாகப் பங்கேற்றனர். இந்தியாவின் முதல் மிஸ் யுனிவர்ஸ் சுஷ்மிதா சென், முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா ஊர்வசி ரவுத்தேலா, 2024-ஆம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா ரியா சிங்ஹா, சுற்றுச்சூழல் ஆர்வலரும் திரைப்படத் தயாரிப்பாளருமான பிரக்யா கபூர் மற்றும் செலினா ஜெய்ட்லி ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.
கடந்த ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா மணிகா விஸ்வகர்மா, வெற்றி மகுடத்தைக் காசியா லிஸ் மேஜோவிற்குச் சூட்டினார்.
முதல் இடம் (மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026): காசியா லிஸ் மேஜோ (கேரளா)
இரண்டாம் இடம் (மிஸ் இன்டர்நேஷனல் இந்தியா 2026): வைஷ்ணவி கணேஷ் (தமிழ்நாடு)
மூன்றாம் இடம்: அனுஸ்ரீ சதாவ்லேகர்
நான்காம் இடம்: தேஜஸ்வினி ஸ்ரீவஸ்தவா
ஐந்தாம் இடம்: அனுபா வசிஷ்ட் சவுத்ரி
கேரளா மாநிலம் மாவேலிக்கரையைச் சேர்ந்த காசியா லிஸ் மேஜோ, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வளர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தவர். தற்போது சட்டப்படிப்பு பயின்று வரும் இவர், ஏற்கனவே 'மிஸ் டீன் இன்டர்நேஷனல்' போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ட வென்ற காசியா லிஸ் மேஜோ, வரும் நவம்பர் மாதம் போர்ட்டோ ரிகோவில் நடைபெறவுள்ள 75-வது உலகளாவிய மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராக்கெட், செயற்கைக்கோள் தயாரிப்பைத் தனியாரிடம் ஒப்படைக்க இஸ்ரோ முடிவு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:57:53 PM (IST)

இந்தியா உலகின் கப்பல் கட்டுமான மையமாக உருவாகும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:58:05 AM (IST)

வாழும் கலை அமைப்புக்கு விதித்த ரூ. 5 கோடி அபராதம் ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 22, ஆகஸ்ட் 2026 5:43:01 PM (IST)

ஏடிஎம்களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூல்? - எஸ்பிஐ நிர்வாகம் விளக்கம்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:00:19 PM (IST)

காவல் நிலையத்தில் ராகுல், பிரியங்கா தர்ணா: டெல்லியில் பெரும் பரபரப்பு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 4:36:39 PM (IST)

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட தமிழக அரசே இடத்தை தீர்மானிக்கட்டும்! - கேரள முதல்வர்
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:56:07 PM (IST)


