» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் இறுதிச் சடங்கு தேதி அறிவிப்பு
புதன் 28, பிப்ரவரி 2024 4:27:07 PM (IST)
ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் இறுதிச் சடங்கு மார்ச் 1 ம் தேதி மாஸ்கோவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோவின் தென்கிழக்கு மாவட்டமான மேரினோவில் உள்ள தேவாலயத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் அவரது இறுதிச் சடங்கு நடைபெறும். அருகில் உள்ள மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் அலெக்ஸியின் செய்தித் தொடர்பாளர் கிரா யார்மிஷ் தெரிவித்தார். ரஷிய அரசையும் புடின் நிர்வாகத்தையும் தொடர்ந்து விமர்சித்து வந்த நாவல்னி (47), ரஷியாவில் ஆர்க்டிக் பிரதேசத்திலுள்ள தொலைதூர சிறையொன்றில் அடைக்கப்பட்டிருந்தார்.
அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நவால்னி சிறையில் இறந்துவிட்டதாக ரஷிய அரசு அறிவித்தது. நவால்னியை புடின் நிர்வாகம் கொன்றுவிட்டதாக மேற்கு நாடுகளும் எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன.அவரது இறப்புக்கான காரணம் தெரியாத நிலையில் நாவல்னியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தப்பட்டது. இந்நிலையில்,அலெக்ஸி நவால்னியின் இறுதிச் சடங்கு மார்ச் 1 வெள்ளிக்கிழமை மாஸ்கோவில் நடைபெறும் என அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:33:58 AM (IST)

பின்லேடன் உங்கள் நாட்டில்தான் கொல்லப்பட்டார் : ஐ.நா. சபையில் பாக். மீது இஸ்ரேல் தாக்கு!
சனி 13, செப்டம்பர் 2025 5:04:44 PM (IST)

ரஷியாவில் ரிக்டர் 7.4 அளவில் பயங்கர நிலநடுக்கம்
சனி 13, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)

நேபாள இடைக்கால பிரதமராக சுசிலா கார்க்கி பதவி ஏற்பு: 6 மாதத்தில் தேர்தல் நடத்த முடிவு
சனி 13, செப்டம்பர் 2025 10:39:31 AM (IST)

உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்பு
சனி 13, செப்டம்பர் 2025 10:34:56 AM (IST)

சார்லி கிர்க் கொலை: குற்றவாளி குறித்த தகவல் அளித்தால் ஒரு லட்சம் டாலர் சன்மானம்!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 12:37:14 PM (IST)
