» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியப் புடவைகளை எரிக்க வேண்டுமா? எதிர்கட்சிகளுக்கு வங்கதேச பிரதமர் பதிலடி!!
திங்கள் 1, ஏப்ரல் 2024 9:31:33 PM (IST)
வெங்காயம், பூண்டு, இஞ்சி உள்ளிட்ட சமையல் பொருள்களை இந்தியாவிலிருந்துதான் இறக்குமதி செய்கிறோம். இவற்றை பயன்படுத்தாமல் எதிர்க்கட்சியினர் சமையல் செய்து உண்பார்களா? என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கேள்வி எழுப்பினார்.
வங்கதேச பிரதமரும் அவாமி லீக் கட்சித் தலைவருமான ஷேக் ஹசீனா கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் வங்கதேச பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இந்தியாவுடன் நட்புறவை பேணி வருகிறார் ஷேக் ஹசீனா. கடந்த பிப்ரவரி மாதம் 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகைப் புரிந்தார்.இந்நிலையில், வங்கதேச தேர்தலில் ஹேக் ஹசீனாவுக்கு இந்தியா உதவியதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்திய பொருள்களைப் புறக்கணிப்போம் என்ற பிரசாரத்தை வங்கதேச எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சி தொடங்கியது. சமூகவலைதளங்களில் இந்திய பொருள்களைப் புறக்கணிப்போம் என பலர் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் அமைதிகாத்துவந்த பிரதமர் ஷேக் ஹசீன தற்போது காட்டமாக பதிலளித்துள்ளார். தாகா தலைமை அலுவலகத்தில் பேசிய அவர், எதிர்க்கட்சி தலைவர்களின் மனைவி வைத்திருப்பது எத்தனை இந்திய புடவைகள் எத்தனை தெரியுமா? பங்களாதேஷ் தேசிய கட்சி தலைவர்கள் இந்திய பொருள்களை புறக்கணிக்க வலியுறுத்துகிறார். அவர்கள் தங்கள் மனைவியிடம் இருக்கும் இந்திய புடவைகளை புறக்கணிக்காதது ஏன்?
தங்கள் கட்சி அலுவலகம் முன்பு தங்கள் மனைவியின் இந்திய புடவைகளை எரிப்பார்களா? அப்படி செய்தால், உண்மையாகவே அவர்கள் இந்தியப் பொருள்களை புறக்கணிப்பதாக ஏற்றுக்கொள்ளலாம். எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும்போது, அவர்களின் மனைவி இந்தியாவிற்கு சென்று புடவைகளை வாங்கிவருவதோடு மட்டுமின்றி, இங்கு விற்பனையும் செய்துள்ளனர். இந்திய ஆடைகளை மட்டுமல்ல, மசாலா பொருள்களையும் அவர்கள் புறக்கணிப்பார்களா?
வெங்காயம், பூண்டு, இஞ்சி உள்ளிட்ட சமையல் பொருள்களை இந்தியாவிலிருந்துதான் இறக்குமதி செய்கிறோம். இவற்றை பயன்படுத்தாமல் அவர்கள் சமையல் செய்து உண்பார்களா? இதற்கு எதிர்க்கட்சி முதலில் பதில் கூற வேண்டும் என கடுமையான கேள்விகளை முன்வைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வளைகுடாப் போரில் அதிரடி திருப்பம்: 4,000 கி.மீ. தூரம் பாயும் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:47:13 AM (IST)

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா பரிசீலனை: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
சனி 21, மார்ச் 2026 4:23:35 PM (IST)

போர்க்காலச் சூழல் மத்தியில் ரமலான் பெருநாள்: அமைதி வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை!
சனி 21, மார்ச் 2026 11:58:42 AM (IST)

அமெரிக்கப் போர் விமானங்கள் தரையிறங்க இலங்கை அனுமதி மறுப்பு: அதிபர் திஸாநாயக்க தகவல்
வெள்ளி 20, மார்ச் 2026 4:07:14 PM (IST)

ஈரான் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்: ட்ரம்ப் - நெதன்யாகு இடையே கருத்து முரண்பாடு!
வெள்ளி 20, மார்ச் 2026 11:45:05 AM (IST)

வடகொரியத் தேர்தலில் கிம் ஜாங் உன் வெற்றி: 0.07% எதிர்ப்பு வாக்குகளால் பரபரப்பு!
புதன் 18, மார்ச் 2026 4:46:37 PM (IST)


இந்தியன்Apr 2, 2024 - 07:00:42 PM | Posted IP 172.7*****