» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷியாவில் மாயமான ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது : 22 பேர் உயிரிழப்பு!

ஞாயிறு 1, செப்டம்பர் 2024 8:41:55 PM (IST)



ரஷியாவில் காணாமல் போன ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில், அதில் பயணித்த 22 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவில் எம்ஐ-8டி ரக ஹெலிகாப்டர் ஒன்று வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து நிக்கோலேவ்கா கிராமத்தில் உள்ள தளத்திற்கு நேற்று புறப்பட்டது. ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிட நேரங்களில் தனது தொடர்பை துண்டித்தது. இந்த ஹெலிகாப்டரில் மூன்று பணியாளர்கள் மற்றும் 19 பயணிகள் என மொத்தம் 22 பேர் பயணித்தனர்.

மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது. இந்நிலையில், காணாமல் போன ரஷிய ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில், அதில் பயணித்த 22 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டறியப்பட்டன. மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory