» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரான் மக்களுக்கு துணையாக நிற்போம்: இஸ்ரேல் பிரதமர் நேதன் யாகு

செவ்வாய் 1, அக்டோபர் 2024 12:10:06 PM (IST)

ஈரான் அரசுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன் யாகு நேரடி எச்சரிக்கை விடுத்தும், ஈரான் மக்களுக்கு ஆதரவாக தெரிவித்தும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது: இஸ்ரேல் உங்களுடன் நிற்கிறது என்பதை ஈரான் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும், உங்களை அடி பணியச் செய்யும் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஈரான் அரசு தனது சொந்த மக்களின் நலன்களை விட பிராந்திய மோதல்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த அரசு ஈரானை ஆழமான இருளிலும் ஆழமான போரிலும் ஆழ்த்துகிறது.

இந்த ஆட்சி உங்களை படுகுழிக்கு நெருக்கமாக கொண்டு வருகிறது. பெரும் பாலான ஈரானியர்களுக்கு இந்த அரசாங்கம் தங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை என்பது தெரியும். உங்களைப் பற்றி அக்கறை கொண்டிருந்தால் மத்திய கிழக்கு முழுவதும் வீணான போர்களுக்காக பில்லியன் கணக்கான டாலர்களை வீணாக்குவதை நிறுத்திவிடும். உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தத் தொடங்கும்.

அணு ஆயுதங்கள் மற்றும் வெளிநாட்டுப் போர்களுக்காக விரயமாக்கப்பட்ட பணம் அனைத்தும் உங்கள் குழந்தைகளின் கல்விக்காகவும், உங்கள் உடல்நலத்தை மேம்படுத்துவதற்காகவும், நாட்டின் உள்கட்டமைப்பு, தண்ணீர், கழிவுநீர் மற்றும் உங்களுக்குத் தேவையான மற்ற எல்லா விஷயங்களிலும் முதலீடு செய்யப்பட்டதா என்று கற்பனை செய்து பாருங்கள்.

ஈரான் சுதந்திரமாக இருக்கும் காலம், மக்கள் நினைக்கும் அந்த தருணம் மிக விரைவில் வரும். யூத மக்கள்-பாரசீக மக்கள் இறுதியாக சமாதானமாக இருப்பார்கள். நமது இரு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் சமாதானமாக இருக்கும். ஹமாஸ் மற்றும் ஹிஸ் புல்லாவை நீங்கள் ஆதரிக்கவில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் உங்கள் தலைவர்கள் ஆதரிக்கிறார்கள். உங்களுடன் இஸ்ரேல் துணையாக நிற்கிறது என்றார்.


மக்கள் கருத்து

ஆனந்த் என்ற முட்டா பய அவர்களுக்குOct 4, 2024 - 09:15:47 AM | Posted IP 162.1*****

கார்கில் போரின்போது ஈரான் தான் இந்தியாவை அழிக்க பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்கியது என்ற செய்திகளில் உள்ளது உனக்கு என்ன தான் தெரியும்?

ஆனந்த்Oct 3, 2024 - 04:17:25 PM | Posted IP 162.1*****

வேடிக்கை மனிதன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory