» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்கி இருக்க வேண்டும் : இஸ்ரேலுக்கு ட்ரம்ப் யோசனை!!
சனி 5, அக்டோபர் 2024 3:56:03 PM (IST)
ஈரானில் உள்ள அனுசக்தி நிலையங்கள் மீது தான் இஸ்ரேல் முதலில் தாக்குதல் நடத்தி இருக்க வேண்டும் என்ற முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபரான தேர்தலுக்கு சரியாக ஒரு மாதமே உள்ள நிலையில், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். வடக்கு கரோலினா மாகாணத்தில் ஈடுபட்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது, செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரானின் அணு ஆற்றல் நிலைகளை தவிர்த்து பிற இடங்களில் தாக்குதல் நடத்தலாம் என்ற அதிபர் ஜோபிடன் கருத்தை விமர்சித்தார்.தாக்குதல் என்று வந்துவிட்டால் அணுசக்தி நிலையங்களை தான் இஸ்ரேல் தாக்கி இருக்க வேண்டும் என்று ட்ரம்ப் கூறினார். அதாவது, "ஈரான் மீதான தாக்குதல் பற்றிய கேள்விக்கு, அணு ஆயுத நிலைகளை தாக்கக் கடாது என்று பைடன் பதில் அளித்தார். ஆனால், அவற்றைத்தான் முதலில் தாக்கி இருக்க வேண்டும். அணு ஆயுத நிலைகளைத்தாள் இலக்கு வைக்க வேண்டும்.
அணு ஆயுதங்களால், பேரழிவை ஏற்படுத்த முடியும் என்றபோது. அந்த அழிவு சக்திகளின் மீதுதான் தாக்குதல் நடத்த வேண்டும்.”இவ்வாறு தெரிவித்தார். அமெரிக்க அதிபராக இருந்த போது, அணு ஆயுதங்களை தாம் மறு கட்டமைத்ததாக கூறிய ட்ரம்ப், அணு ஆயுதங்களை உருவாக்கும் முடிவினை வெறுத்ததாகவும் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரான் உச்ச தலைவர் பற்றி தகவல் கொடுத்தால் 10 மில்லியன் டாலர் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு
சனி 14, மார்ச் 2026 12:45:28 PM (IST)

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி: தூதரக ரீதியிலான வெற்றி
வியாழன் 12, மார்ச் 2026 12:40:43 PM (IST)

அமெரிக்காவுக்கு வடகொரியா பகிரங்க மிரட்டல்: ஏவுகணை சோதனையைப் பார்வையிட்டார் கிம்!
வியாழன் 12, மார்ச் 2026 8:35:09 AM (IST)

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை அறிவிப்பு!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:53:28 PM (IST)

ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
திங்கள் 9, மார்ச் 2026 11:38:21 AM (IST)

ஈரான் நிபந்தனையின்றி சரண் அடைய வேண்டும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை
ஞாயிறு 8, மார்ச் 2026 8:56:43 PM (IST)

