» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டும்: அதிருப்தி எம்.பி.க்கள் கெடு

வெள்ளி 25, அக்டோபர் 2024 5:35:24 PM (IST)

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 4 நாட்களுக்குள் பதவி விலக வேண்டும் என்று  அதிருப்தி எம்.பி.க்கள் கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியின் செல்வாக்கு மக்களிடையே சரிந்து வருகிறது. இது கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் எதிரொலித்தது. இடைத்தேர்தல் நடந்த 2 முக்கிய தொகுதிகளிலும் லிபரல் கட்சி தோல்வியை சந்தித்தது.

இந்த தோல்விக்கு பிரதமர் ட்ரூடோ தான் காரணம் என குற்றம் சாட்டிய லிபரல் கட்சி எம்.பி.க்கள் சிலர் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இந்நிலையில் லிபரல் கட்சி எம்.பி.க்கள் நேற்று முன் தினம் ரகசிய கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டுமென அதிருப்தி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

4 நாட்களுக்குள் (அக்.28) ட்ரூடோ பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை அவரிடமே கொடுத்துள்ளனர். ட்ரூடோ மீண்டும் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டி வருகிறார். இதனால் இந்தியா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory