» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியாவில் சிறு, குறு நிறுவனங்களுக்கு முன்னுரிமை : ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு
வியாழன் 5, டிசம்பர் 2024 12:10:22 PM (IST)
இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு சிறு, குறு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது என ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அந்நாட்டு அதிபர் புதின் பேசியதாவது: இந்தியாவில் சிறு, குறு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா திட்டம்' பாராட்டக் கூடியது. இந்திய பிரதமர் மோடியும், அவரது தலைமையிலான அரசும் நிலையான சூழலை உருவாக்கி வருகிறது. இந்தியாவுக்கு முதலில் வாருங்கள் என்ற கொள்கையை இந்தியாவின் தலைமை பின்பற்றுவதே இதற்கு காரணம். இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்
ரஷ்யாவில் விவசாயம் உட்பட அனைத்து துறைகளிலும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்புகளை விரிவு படுத்துவதற்கான தேவை உள்ளது.கடந்த ஆண்டு நாங்கள் 66 பில்லியன் டாலர் அளவுக்கு தானியங்களை ஏற்றுமதி செய்தோம்" என்றார்.
இந்தியாவின் அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் புதின் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். புதினின் இந்த பயணத்தின் போது இரு நாட்டு நலன்கள் தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா பரிசீலனை: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
சனி 21, மார்ச் 2026 4:23:35 PM (IST)

போர்க்காலச் சூழல் மத்தியில் ரமலான் பெருநாள்: அமைதி வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை!
சனி 21, மார்ச் 2026 11:58:42 AM (IST)

அமெரிக்கப் போர் விமானங்கள் தரையிறங்க இலங்கை அனுமதி மறுப்பு: அதிபர் திஸாநாயக்க தகவல்
வெள்ளி 20, மார்ச் 2026 4:07:14 PM (IST)

ஈரான் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்: ட்ரம்ப் - நெதன்யாகு இடையே கருத்து முரண்பாடு!
வெள்ளி 20, மார்ச் 2026 11:45:05 AM (IST)

வடகொரியத் தேர்தலில் கிம் ஜாங் உன் வெற்றி: 0.07% எதிர்ப்பு வாக்குகளால் பரபரப்பு!
புதன் 18, மார்ச் 2026 4:46:37 PM (IST)

ஈரான் பாதுகாப்புப் படைத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டாரா? இஸ்ரேல் அறிவிப்பு!
செவ்வாய் 17, மார்ச் 2026 4:48:46 PM (IST)

