» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தானில் 8 பயங்கரவாதிகள் சுட்டு கொலை: பாதுகாப்பு படை நடவடிக்கை!
வெள்ளி 6, டிசம்பர் 2024 4:46:54 PM (IST)
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் 6 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் சவுத் வசீரிஸ்தான் மற்றும் லக்கி மார்வாத் மாவட்டங்களில் பயங்கரவாதிகளின் நடவடிக்கை பற்றிய ரகசிய தகவல் அடிப்படையில், பாதுகாப்பு படை தனித்தனியாக நடவடிக்கை மேற்கொண்டனர். சவுத் வசீரிஸ்தானுக்கு உட்பட்ட சாராரோகா பகுதியில் நடந்த இந்த சோதனையில் கார்ஜி தலைவரான கான் முகமது என்ற கோரியாய் என்பவர் உள்பட 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
லக்கி மார்வாத் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில், 6 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இவர்கள் தவிர, 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் படுகொலை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கான் முகமது என்பவரும் ஒருவர் ஆவார். இவரை பிடித்து தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் அளிக்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது.
பாகிஸ்தானில் கடந்த நவம்பரில் 68 ராணுவ அதிகாரிகள் மற்றும் 127 பயங்கரவாதிகள் உள்ளிட்ட 245 பேர் படுகொலை செய்யப்பட்டனர். நாட்டில் பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டு, அமைதி உறுதி செய்யப்படுவதற்கான பணியை பாதுகாப்பு படையினர் உறுதியான முடிவுடன் மேற்கொண்டு வருகின்றனர் என ராணுவ ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நான் எந்த தவறும் செய்யவில்லை: நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ வாதம்!!
செவ்வாய் 6, ஜனவரி 2026 11:58:22 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல்; வரியை உயர்த்துவோம்: இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்!
திங்கள் 5, ஜனவரி 2026 12:00:57 PM (IST)

வெனிசுலாவில் ஜனநாயகம் மீண்டும் திரும்ப பணியாற்ற தயார் : ஜப்பான் பிரதமர்
திங்கள் 5, ஜனவரி 2026 11:53:40 AM (IST)

வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்; அதிபரும், மனைவியும் நாடு கடத்தல்: டிரம்ப் அறிவிப்பு!
சனி 3, ஜனவரி 2026 3:44:55 PM (IST)

சீனாவுடன் தைவான் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: அதிபர் ஜின்பிங் உறுதி!
வெள்ளி 2, ஜனவரி 2026 10:16:45 AM (IST)

அமைதி ஒப்பந்தத்தின் அந்த 10 சதவீதம் உக்ரைன் தலைவிதியை தீர்மானிக்கும்: ஜெலன்ஸ்கி
வியாழன் 1, ஜனவரி 2026 11:44:49 AM (IST)

