» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜிமெயில் முகவரியை மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகம்: கூகுள் நிறுவனம் அறிவிப்பு

புதன் 31, டிசம்பர் 2025 3:29:53 PM (IST)



இனி ஜிமெயில் பயனர்கள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை மாற்றிக் கொள்ளலாம் என்ற வசதியை கூகுள் நிறுவனம் படிப்படியாக அறிமுகம் செய்து வருகிறது.

இ மெயில் மின்னஞ்சல் சேவை கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் 1 GB சேமிப்பிடத்துடன் தொடங்கப்பட்டு, பின்னர் 15 GB வரை வழங்கப்பட்டது. தற்போது ஜிமெயில் மின்னஞ்சல் பயனபடுத்தாதவர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு பயன்பாடு அதிகரித்துள்ளது. இ மெயில் சேவையில் உலக அளவில் ஜிமெயில் முதலிடம் வகிக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 180 கோடி ஜிமெயில் கணக்குகள் உள்ளன. 

பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது அப்டேட்களை கூகுள் நிறுவனம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் புதிய அப்டேட் ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. இதன்படி, பயனர்கள் தங்கள் கூகுள் கணக்கை அப்படியே வைத்துக்கொண்டு, யூசர் நேமில் பழைய ஜிமெயில் முகவரியை மாற்றிவிட்டு, புதிய முகவரியாக மாற்றிக்கொள்ளலாம். ஜிமெயில் ஐடி அட்ரஸ் மாற்றினாலும் பெரிய சிக்கல் ஏற்படாது எனவும், பழைய மற்றும் புதிய ஜிமெயில் முகவரிகளுக்கு அனுப்பப்படும் அனைத்து மின்னஞ்சல்களுமே இன்பாக்ஸிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்கள் தங்கள் ஜிமெயில் முகவரியை மாற்றிய பிறகு, அடுத்த ஓராண்டுக்கு புதிய முகவரியை மாற்றவோ அல்லது நீக்கவோ முடியாது என்ற கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்படும். இந்த வசதியை படிப்படியாக அறிமுகம் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது. ஜிமெயில் முகவரி மாற்றினாலும் மெயிலில் உள்ள தரவுகள், புகைப்படங்கள் எந்த பாதிப்பும் இன்றி இருக்கும் எனவும் யூடியூப், டிரைவ் உள்ளிட்டவைகளை அணுகுவதிலும் எந்த சிரமும் இருக்காது என கூகுள் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory