» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனுக்கு ‘சர்’ பட்டம்: இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் வழங்கினார்!

வியாழன் 19, டிசம்பர் 2024 3:40:05 PM (IST)



ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் மற்றும் அவரது மனைவி எம்மா தாமஸுக்கு ‘சர்’ பட்டம் வழங்கி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கவுரவித்துள்ளார்.

பல்வேறு துறைகளில் சாதனை புரியும் அல்லது நாட்டுக்காக சேவை செய்யும் தனி நபர்களுக்கு இங்கிலாந்து மன்னர் அல்லது ராணியால் ‘சர்’ பட்டம் (நைட்ஹுட்) வழங்கப்படுகிறது. இதைப் பெற்றவர்கள், தங்கள் பெயருக்கு முன்பு ‘திரு’ என்பதற்கு பதில் ‘சர்’ என போட்டுக்கொள்ளலாம். இந்த வகையில் ஹாலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனுக்கும், அவரது மனைவிக்கும் ‘சர்’ பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. நோலனின் பெரும்பாலான படங்களுக்கு அவரது மனைவி தயாரிப்பாளராக இருந்துள்ளார்.

இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் ‘சர்’ பட்டம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தி டார்க் நைட்’, ‘ஓப்பன்ஹைமர்’ போன்ற ப்ளாக் பஸ்டர் படங்களை இணைந்து தயாரித்து திரையுலகில் சிறப்பான பங்களிப்பை செலுத்தியதற்காக நோலன் தம்பதியினருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது” என அரச குடும்பத்தின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சந்திப்பின்போது, நோலன் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘ஓப்பன்ஹைமர்’ படம் குறித்த தனது பாராட்டை இளவரசர் சார்லஸ் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory