» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவின் தேசிய பறவையாக வழுக்கை கழுகு அறிவிப்பு

புதன் 25, டிசம்பர் 2024 4:54:55 PM (IST)

அமெரிக்காவின் தேசிய பறவையாக வழுக்கை கழுகு அறிவிக்கப்பட்டுள்ளது.

வழுக்கை கழுகு (Bald Eagle) வட அமெரிக்காவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. தலைப்பகுதியில் வெள்ளை நிறம் கொண்டுள்ள இந்த கழுகு அமெரிக்காவில் சக்தி மற்றும் வலிமையின் அடையாளமாக கருதப்படுகிறது. அமெரிக்க வரலாற்றுடன் வழுக்கை கழுகுகளுக்கு 240 ஆண்டுகளுக்கு மேல் தொடர்பு உள்ளது.

இதையடுத்து, வழுக்கை கழுகை அமெரிக்காவின் தேசிய பறவையாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில், வழுக்கை கழுகு அமெரிக்காவின் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் வழுக்கை கழுகு அமெரிக்காவின் தேசிய பறவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory