» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பள்ளி கண்காட்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 35 குழந்தைகள் பலி: நைஜீரியாவில் சோகம்!

வெள்ளி 20, டிசம்பர் 2024 12:12:12 PM (IST)

நைஜீரியாவில் பள்ளி கண்காட்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். 

நைஜீரியாவின் தென்மேற்கு நகரமான இபாடானில் உள்ள பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த சூழலில் கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆண்டு நிறைவையொட்டி அந்த பள்ளியில் நேற்று முன் தினம் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க மாணவ, மாணவியரின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். 

நிகழ்ச்சியின்போது பரிசு பொருட்களும் கொடுக்க ஏற்பட்டு செய்யப்பட்டிருந்தது. இதனால், நிகழ்ச்சியை காணவும், பரிசு பொருட்களை வாங்கவும் பள்ளிக்கூடத்தில் கூட்டம் குவிந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது . இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. மேலும், பலர் படுகாயமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 35-ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாநில குற்றப் புலனாய்வு துறையின் குற்றப் பிரிவு விசாரணையை தொடங்கி உள்ளதாகவும் ஓயோ மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர் அடேவாலே ஒசிபெசோ தெரிவித்தார்.

இந்த துயர சம்பவத்திற்கு நைஜீரிய அதிபர் போலா டினுபு ஆழ்ந்த வருத்தத்தை" தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory