» செய்திகள் - விளையாட்டு » உலகம்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை தாமதப்படுத்திய ஹமாஸ்; இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலி!
ஞாயிறு 19, ஜனவரி 2025 8:43:13 PM (IST)

போர் நிறுத்த ஒப்பந்தத்தை சுமார் 3 மணிநேரம் ஹமாஸ் தாமதப்படுத்தியதால் ஆத்திரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல், ஹமாஸ் இடையே இன்று மதியம் 12 மணிக்கு (இஸ்ரேல் நேரப்படி காலை 8.30 மணி) தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வரவிருந்தது. இதற்கான ஒப்பந்தம் உறுதியாகியிருந்தது. ஒப்பந்தப்படி ஹமாஸ் தங்கள் வசமுள்ள இஸ்ரேலிய பணய கைதிகளில் 3 பேரை இன்று விடுதலை செய்ய வேண்டும். இதற்கு ஈடாக 90 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்ய வேண்டும்.
ஒப்பந்தப்படி, இரு தரப்பும் விடுதலை செய்ய உள்ள கைதிகளின் பெயர் விவரங்களை 24 மணிநேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும். அதன்படி, விடுதலை செய்யப்பட உள்ள பாலஸ்தீனிய கைதிகள் 90 பேரின் பெயர் விவரத்தை இஸ்ரேல் நேற்றே வெளியிட்டுவிட்டது. ஆனால், விடுதலை செய்யப்பட உள்ள இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரின் பெயர் விவரத்தை ஹமாஸ் ஆயுதக்குழு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.
போர் நிறுத்த ஒப்பந்தப்படி விடுதலை செய்யப்பட உள்ள பணய கைதிகளின் பெயர் விவரங்களை ஹமாஸ் மதியம் 12 மணிக்குள் (இஸ்ரேல் நேரப்படி காலை 8.30 மணி) வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், பெயர் விவரத்தை வெளியிடாமல் ஹமாஸ் ஆயுதக்குழு போர் நிறுத்த ஒப்பந்தத்தை தாமதப்படுத்தியது. இதனால், ஆத்திரமடைந்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது.
காசா முனையின் ரபா, கான் யூனிஸ், காசா சிட்டி, வடக்கு காசா ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு (இஸ்ரேல் நேரப்படி காலை 8.30) அமலாக இருந்த இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் சுமார் 3 மணிநேர தாமதத்திற்குப்பின் மதியம் 2.45 மணியளவில் (இஸ்ரேல் நேரப்படி 11.15 மணி) அளவில் அமலுக்கு வந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போருக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பும் ஈரான்: மீண்டும் சர்வதேச விமானங்கள் இயக்கம்!
சனி 25, ஏப்ரல் 2026 5:45:45 PM (IST)

ஈரான் உடனான 2ஆம் கட்ட அமைதிப்பேச்சுவார்த்தை : அமெரிக்க துணை அதிபர் பங்கேற்கவில்லை
சனி 25, ஏப்ரல் 2026 12:03:38 PM (IST)

ஈரான் மீது அணு ஆயுதம் பயன்படுத்த மாட்டேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:00:28 PM (IST)

இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஏப். 27-ல் கையெழுத்தாகிறது
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:14:18 PM (IST)

இந்தியர்களுக்கு இனி விசா தேவையில்லை: பிரான்ஸ் அரசு அறிவிப்பு
வெள்ளி 24, ஏப்ரல் 2026 11:17:03 AM (IST)

ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
புதன் 22, ஏப்ரல் 2026 10:54:33 AM (IST)


உண்மையான தேச பக்தன்Jan 20, 2025 - 09:21:07 AM | Posted IP 162.1*****