» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் மனைவி, 3 உறவினர்கள் சுட்டுக் கொலை: இந்திய வம்சாவளி நபர் கைது

ஞாயிறு 25, ஜனவரி 2026 8:58:50 PM (IST)

அமெரிக்காவில் குடும்ப தகராறில் மனைவி, மற்றும் 3 உறவினர்களை சுட்டுக் கொன்ற இந்திய வம்சாவளி நபரை போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா பகுதியைச் சேர்ந்தவர் விஜய்குமார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் மனைவி மீமூ டோக்ரா (43), 12 வயது மகன் ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் மூவரும் அதே மாகாணத்தில் லாரன்ஸ்வில் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளனர்.

ஆனால், உறவினர் வீட்டிலும், மீமு டோக்ரா, விஜய்குமார் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விஜய் குமார், அமெரிக்க நேரப்படி நேற்று அதிகாலை 2.30 மணிக்கு மனைவி மீமூ டோக்ரா, அவரது உறவினர்களான கவுரவ் குமார் (33), நிதி சந்தர் (37), ஹரிஷ் சந்தர் (38) ஆகியோரை தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

அப்போது வீட்டில் இருந்த விஜய்குமாரின் மகன் உட்பட 3 குழந்தைகளும் அலமாரிக்குள் ஒளிந்து கொண்டனர். அவர்களில் 12 வயது சிறுவன் 911 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு அழைத்துத் தகவல் கொடுத்த நிலையில் போலீசார் விரைந்து சென்று விஜய்குமாரை கைது செய்தனர். 3 குழந்தைகளையும் மீட்டனர். 4 சடலங்களை மீட்டு அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அட்லாண்டா போலீசார் விஜய்குமார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory