» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இத்தாலியில் திருமணமாகாதவர்கள் குழந்தைகளை தத்தெடுக்க அனுமதி : 40 ஆண்டு தடை நீக்கம்!
செவ்வாய் 25, மார்ச் 2025 12:46:25 PM (IST)

இத்தாலியில் திருமணமாகாதவர்கள் வெளிநாட்டு சிறார்களை தத்தெடுக்கலாம் என்று அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் 40 ஆண்டுகால தடை முடிவுக்கு வந்துள்ளது.
இத்தாலியில் 1983-ம் ஆண்டு இயற்றப்பட்ட சர்வதேச தத்தெடுப்புச் சட்டத்தின்படி, திருமணமான தம்பதியர் மட்டுமே வெளிநாட்டு குழந்தையை தத்தெடுக்க முடியும். மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்து குழந்தை தத்தெடுப்புக்கான இத்தாலிய சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் தற்போது நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதாவது வெளிநாட்டு குழந்தைகளைத் தத்தெடுப்பது வெகுவாக குறைந்து வருகிறது. இது குடும்ப சூழலில் வளர்வதற்கான குழந்தைகளின் உரிமையை மறுப்பதாக உள்ளது. எனவே 40 ஆண்டுகளுக்கு முந்தைய சர்வதேச தத்தெடுப்புச் சட்டத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் திருமணம் ஆகாதவர்களும் இனிமேல் வெளிநாட்டு குழந்தைகளை தத்தெடுக்க முடியும். இதே போல் ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும், திருமணம் ஆகாதவர்கள் குழந்தைகளை தத்தெடுக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மத்திய கிழக்கில் அமைதி முயற்சிகளுக்கு முழு ஆதரவு : ஐ.நா. கூட்டத்தில் இந்தியா உறுதி
சனி 25, அக்டோபர் 2025 5:46:24 PM (IST)

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா குறைத்துள்ளது: அமெரிக்கா
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:47:53 PM (IST)

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா
வியாழன் 23, அக்டோபர் 2025 4:21:51 PM (IST)

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதலுக்கு இந்தியா காரணமா? ஆப்கானிஸ்தான் பதிலடி
புதன் 22, அக்டோபர் 2025 12:24:10 PM (IST)

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி தேர்வு!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 5:20:01 PM (IST)

வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் 155 சதவீதம் வரி: சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 12:53:30 PM (IST)




