» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷ்ய அதிபர் புதினின் பாதுகாப்பு அணிவகுப்பில் கார் வெடித்து சிதறியது: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!

திங்கள் 31, மார்ச் 2025 8:26:34 AM (IST)



ரஷ்ய அதிபர் புதினின் பாதுகாப்பு அணிவகுப்பில் பயன்படுத்தப்படும் கார் திடீரென வெடித்து சிதறியது. இது அவரை கொலை செய்ய நடந்த சதி முயற்சியா? என்கிற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

உலகளவில் அதிகப்படியான பாதுகாப்பில் இருக்கும் தலைவர்களில் ரஷ்ய அதிபர் புதினும் ஒருவர். அவரது உயிருக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் இருப்பதால் எப்போதும் உச்சக்கட்ட பாதுகாப்புடனே இருப்பார். குறிப்பாக அவர் ஒரு இடத்துக்குச் செல்கிறார் என்றால் சில வாரங்களுக்கு முன்பே அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கி விடும்.

அத்தகைய பாதுகாப்பு நிறைந்த புதினின் பாதுகாப்பு அணிவகுப்பில் ‘லிமோசின்’ என்ற காரும் உள்ளது. ரஷ்யாவின் ஆரஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த கார் தலைநகர் மாஸ்கோவில் உள்ள உளவுத்துறை தலைமை அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது அந்த காரின் என்ஜினில் இருந்து திடீரென புகை வெளியேறியது. அதனை தொடர்ந்து கார் வெடித்து சிதறியது.

இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தின்போது புதின் அந்த காரில் பயணிக்கவில்லை என்பதால் நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பினார். அதேபோல இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

அதே சமயம் அதிபர் புதினின் பாதுகாப்பு அணிவகுப்பில் இடம் பெறும் கார் வெடித்து சிதறியது ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. "புதின் விரைவில் இறந்துவிடுவார். அதன் பிறகு போர் முடிவுக்கு வரும்” என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

இதனால் கார் வெடிப்பு இந்த சம்பவம் புதினை கொலை செய்ய நடந்த சதி முயற்சியா? என்கிற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. எனவே அந்த கோணத்தில் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெடித்து சிதறிய ‘லிமோசின்’ கார் புதினுக்கு மிகவும் பிடித்த கார் என்றும் அதன் விலை சுமார் ரூ. 3 கோடி என்றும் கூறப்படுகிறது. வட கொரியா தலைவர் கிம் ஜாங் உன் உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் இந்த வகை கார்களைத்தான் புதின் பரிசாக அளித்தார் என்பது குறிப்பி


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory