» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் டிரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 30, மே 2025 12:19:03 PM (IST)
அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு எதிராக எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் ஆட்சி நடைபெறும் 12 மாகாணங்கள் நியூயார்க் நகரிலுள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. இதனை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அவரின் அதிகார மீறலாகும் என்று விமர்சித்து, அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்க அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று முறையிடப்பட்டது. வரி விதிப்பு விவகாரத்தில் வர்த்தக நீதிமன்றத்தின் தடைக்கு அவசர நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அரசின் முறையீட்டை உச்சநீதிமன்றம்ஏற்றுக் கொண்டது.
மேலும், வரி விதிப்பை நிறுத்திவைப்பது தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம் தற்காலிகமாக வரி விதிப்பு நடவடிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளனர். மேலும், இந்த வழக்குகளில் உள்ள வாதங்களுக்கு ஜூன் 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும், நிர்வாகம் ஜூன் 9 ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரிட்டனில் வாக்களிக்கும் வயது 16ஆக குறைப்பு
வெள்ளி 18, ஜூலை 2025 12:49:38 PM (IST)

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் நெருங்கிவிட்டோம் : அமெரிக்க அதிபர் டிரம்ப்
வியாழன் 17, ஜூலை 2025 5:26:05 PM (IST)

ஒரு கணம் கூட விவாகரத்துப் பற்றி சிந்தித்ததே கிடையாது: மிச்சல் ஒபாமா விளக்கம்!
வியாழன் 17, ஜூலை 2025 3:28:56 PM (IST)

நிமிஷாவை செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது: கொல்லப்பட்டவரின் சகோதரர் திட்டவட்டம்!
வியாழன் 17, ஜூலை 2025 11:46:44 AM (IST)

ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் தடை: இந்தியா, சீனாவுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை!
புதன் 16, ஜூலை 2025 10:45:54 AM (IST)

இந்திய அரசு முயற்சி: கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஒத்திவைத்தது ஏமன்!
செவ்வாய் 15, ஜூலை 2025 5:04:27 PM (IST)
