» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வர்த்தக தடை மிரட்டல் விடுத்து இந்தியா-பாகிஸ்தான் போரை தடுத்து நிறுத்தினேன்: டிரம்ப்
ஞாயிறு 1, ஜூன் 2025 10:42:16 AM (IST)
வர்த்தக தடை விதிக்கப்படும் என மிரட்டல் விடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே நிகழவிருந்த அணு ஆயுதப்போரை தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் உள்ள சுற்றுலா நகரமான பஹல்காமில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் துல்லிய தாக்குதல் நடத்தி இந்தியா பதிலடி கொடுத்தது.
இதனை தொடர்ந்து இருநாட்டின் ராணுவங்களும் ஏவுகணைகளை வீசியும், டிரோன்களை அனுப்பியும் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சண்டையில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த போர் தாக்குதல் அதிரடியாக நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தைக்கு தான் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். ஆனால் இருநாடுகள் பேச்சுவார்த்தையில் எந்த நாடுகளும் தலையிடவில்லை என இந்தியா தரப்பில் தொடர்ந்து விளக்கம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரை நிறுத்தியதற்கு முழு புகழும் தன்னையே சாரும் என டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள இரும்பாலைக்கு நேரில் சென்று டிரம்ப் ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியா-பாகிஸ்தான் இடையே அண்மையில் நடந்த போர் தாக்குதலை தான் நிறுத்தியதற்கு பெருமை அடைவதாக தெரிவித்தார்.
"அவர்கள் (இந்தியா-பாகிஸ்தான்) துப்பாக்கிகள், குண்டுகள் பொழிந்து போரில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் இடையே அணு ஆயுதப்போர் ஏற்படும் அபாயம் நிலவியது. ஆனால் நான் பொருளாதார ரீதியாக அவர்களுடன் போரிட உள்ளதாக அச்சுறுத்தினேன்.
அதாவது இருநாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்வேன் என பகிரங்க மிரட்டல் விடுத்தேன். இதனால் அவர்கள் பணிந்து போரை கைவிட்டனர். வழக்கமாக தோட்டாக்கள் மூலம் போர் நிறுத்தம் அமலுக்கு வரும். ஆனால் நான் வர்த்தகம் மூலம் போர் நிறுத்தம் மேற்கொண்டேன். இதுகுறித்து யாரும் வாய்திறக்க மாட்டார்கள். தற்போது இருநாடுகளிலும் அமைதி நிலவுகிறது” என்று அவர் கூறினார்.
போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் டிரம்பின் பங்கை இந்தியா மறுத்து வரும்நிலையில் அவர் மீண்டும் மீண்டும் இவ்வாறு கூறுவது மத்திய அரசவையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரிட்டனில் வாக்களிக்கும் வயது 16ஆக குறைப்பு
வெள்ளி 18, ஜூலை 2025 12:49:38 PM (IST)

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் நெருங்கிவிட்டோம் : அமெரிக்க அதிபர் டிரம்ப்
வியாழன் 17, ஜூலை 2025 5:26:05 PM (IST)

ஒரு கணம் கூட விவாகரத்துப் பற்றி சிந்தித்ததே கிடையாது: மிச்சல் ஒபாமா விளக்கம்!
வியாழன் 17, ஜூலை 2025 3:28:56 PM (IST)

நிமிஷாவை செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது: கொல்லப்பட்டவரின் சகோதரர் திட்டவட்டம்!
வியாழன் 17, ஜூலை 2025 11:46:44 AM (IST)

ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் தடை: இந்தியா, சீனாவுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை!
புதன் 16, ஜூலை 2025 10:45:54 AM (IST)

இந்திய அரசு முயற்சி: கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஒத்திவைத்தது ஏமன்!
செவ்வாய் 15, ஜூலை 2025 5:04:27 PM (IST)

டேய் டிரம்ப்Jun 2, 2025 - 12:06:14 PM | Posted IP 104.2*****