» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா கடும் வரி விதிப்பு: ஜெலன்ஸ்கி வரவேற்பு
திங்கள் 8, செப்டம்பர் 2025 5:44:39 PM (IST)
ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு அமெரிக்கா கடுமையான வரி விதிப்பதை வரவேற்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் கடும் தாக்குதலை அடுத்து ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், "தனது வெட்கக்கேடான தாக்குதல்களால் ரஷ்யா, உக்ரைனுக்கு வலியை ஏற்படுத்த முயல்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உலகை சோதிக்கிறார் என்பதற்கான தெளிவான அறிகுறி இது. எனவேதான், ரஷ்யாவுக்கும், அந்நாட்டுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் விதிக்கப்படும் கடுமையான வரிகள் மற்றும் கட்டுப்பாடுகளை ஆதரிப்பது அவசியமாகிறது. இழப்புகளை அவர்கள் உணர வேண்டும். அதுதான் உண்மையிலேயே உறுதியானது.
புதின் பேச்சுவார்த்தைகளை விரும்பவில்லை. பேச்சுவார்த்தைக்கு முன்வருபவர்களிடம் இருந்து அவர் ஓடி ஒளிகிறார். போர் நிறுத்தத்துக்கும் தலைவர்கள் மட்டத்திலான சந்திப்புக்கும் மறுக்கும் புடினுக்கு, பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்துவதுதான் சரியான பதிலடி" என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உலகின் பல நாடுகளுக்கு எதிராக கடுமையான வரிகளை விதித்துள்ளார். குறிப்பாக, பிரேசில் மற்றும் இந்தியப் பொருட்களுக்கு 50%, சுவிட்சர்லாந்துக்கு 39%, கனடாவுக்கு 35% வரிகளை ட்ரம்ப் விதித்துள்ளார். இதனால், இந்த நாடுகள் அமெரிக்கா மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சார்லி கிர்க் கொலை: குற்றவாளி குறித்த தகவல் அளித்தால் ஒரு லட்சம் டாலர் சன்மானம்!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 12:37:14 PM (IST)

சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்றவரை அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் : டிரம்ப் ஆவேசம்!!
வியாழன் 11, செப்டம்பர் 2025 12:38:45 PM (IST)

நேபாளத்தில் தொடரும் வன்முறை: வணிக வளாகங்களை கொள்ளையடிக்கும் பொதுமக்கள்!
புதன் 10, செப்டம்பர் 2025 5:25:44 PM (IST)

இந்தியாவுடன் வர்த்தகத் தடைகளைத் தீர்க்க டிரம்ப் விருப்பம்: பிரதமர் மோடி வரவேற்பு!
புதன் 10, செப்டம்பர் 2025 11:31:53 AM (IST)

நேபாளத்தில் தொடர் போராட்டம் வன்முறை எதிரொலி: பிரதமர் ஷர்மா ஒலி ராஜினாமா
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 3:30:07 PM (IST)

சமூக வலைதளங்களுக்கு தடை: நேபாளத்தில் போராட்டம் - துப்பாக்கி சூட்டில் 9பேர் பலி!
திங்கள் 8, செப்டம்பர் 2025 4:11:10 PM (IST)
