» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் ரூ.898 கோடி பொருட்களை கொள்ளையடித்த 2 பேர் கைது
திங்கள் 27, அக்டோபர் 2025 8:58:03 AM (IST)

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் ரூ.898 கோடி பொருட்களை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மிகப்பெரிய லூவ்ரே அருங்காட்சியகம் அமைந்துள்ளது. ஈபிள் கோபுரத்துக்கு அடுத்தபடியாக அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக இது திகழ்கிறது. கடந்த வாரம் இந்த அருங்காட்சியகத்தில் முகமூடியுடன் சிலர் நுழைந்தனர். பின்னர் மின் கருவிகளை பயன்படுத்தி வைர கிரீடம் உள்ளிட்ட விலைமதிப்பு மிக்க பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடினர்.
அவற்றின் மதிப்பு சுமார் ரூ.898 கோடி ஆகும். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் இருந்து குற்றவாளிகள் வெளிநாடு தப்பி செல்ல முயற்சிப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்த போலீசார் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மத்திய கிழக்கில் அமைதி முயற்சிகளுக்கு முழு ஆதரவு : ஐ.நா. கூட்டத்தில் இந்தியா உறுதி
சனி 25, அக்டோபர் 2025 5:46:24 PM (IST)

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா குறைத்துள்ளது: அமெரிக்கா
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:47:53 PM (IST)

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா
வியாழன் 23, அக்டோபர் 2025 4:21:51 PM (IST)

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதலுக்கு இந்தியா காரணமா? ஆப்கானிஸ்தான் பதிலடி
புதன் 22, அக்டோபர் 2025 12:24:10 PM (IST)

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி தேர்வு!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 5:20:01 PM (IST)

வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் 155 சதவீதம் வரி: சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 12:53:30 PM (IST)




