» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவுடன் வர்த்தகத் தடைகளைத் தீர்க்க டிரம்ப் விருப்பம்: பிரதமர் மோடி வரவேற்பு!

புதன் 10, செப்டம்பர் 2025 11:31:53 AM (IST)



இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க விரும்புவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது சமூக வலைத்தளத்தில், நமது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தடைகளை நிவர்த்தி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

வரும் வாரங்களில் எனது நல்ல நண்பரான பிரதமர் மோடியுடன் பேச நான் காத்திருக்கிறேன். நமது இரு பெரிய நாடுகளுக்கும் இடையில் ஒரு வெற்றிகரமான முடிவு கிடைப்பதில் எந்த சிரமமும் இருக்காது என்று உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

டிரம்ப்பின் கோரிக்கையை வரவேற்ற பிரதமர் மோடி, இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள். இந்தியா - அமெரிக்க உறவின் வரம்பற்ற திறனைத் வளர்ப்பதற்கு வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் வழி வகுக்கும் என்று நம்புகிறேன்.

இந்த பேச்சுவார்த்தைகளை விரைவில் முடிக்க எங்கள் குழுக்கள் பணியாற்றி வருகின்றன. அதிபர் டிரம்ப்புடன் பேசவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். எங்கள் இரு நாட்டு மக்களுக்கும் பிரகாசமான, வளமான எதிர்காலத்தைப் பாதுகாக்க நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியா மீது 50 சதவிகித வரியை அமெரிக்கா விதித்தது மட்டுமின்றி, மறுஉத்தரவு பிறப்பிக்கும்வரையில் இந்தியாவுடன் எந்தவொரு வர்த்தகப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும் டிரம்ப் கூறினார். இதனையயடுத்து, ரஷியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில்தான், இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory