» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சீனா, இங்கிலாந்து நாடுகளை தொடர்ந்து ஜெர்மனியும் இந்தியர்களுக்கு அழைப்பு!
புதன் 24, செப்டம்பர் 2025 10:40:27 AM (IST)
சீனா, இங்கிலாந்து நாடுகளை தொடர்ந்து இந்தியர்களை தங்கள் நாட்டுக்கு வரும்படி இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் அக்கர்மேன் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச் 1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி உள்ளார். எச் 1பி விசா மூலமாக தான் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பணி செய்ய முடியும். ஆனால் அமெரிக்க நிறுவனங்களின் பணிகள் அமெரிக்கர்களுக்கு மட்டும் தான் என்ற கொள்கையால் டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார்.அமெரிக்காவின் எச் 1பி விசா திட்டத்தில் பயன்பெறுவோரில் 71 சதவீதம் இந்தியர்கள் தான். இதனால் இந்தியாவை குறிவைத்து டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதனால் இனி அமெரிக்கா சென்று பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை சரியும்.
இந்நிலையில் தான் அமெரிக்காவின் எச் 1பி விசா கட்டண உயர்வை தொடர்ந்து இந்தியர்களை சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டுக்கு வந்து பணியாற்றும்படி அழைப்பு விடுத்து உள்ளன. அந்த வரிசையில் இப்போது ஜெர்மனியும் இணைந்துள்ளது. இந்தியா மற்றும் பூடான் நாட்டுக்கான ஜெர்மனி தூதராக இருக்கும் பிலிப் அக்கர்மேன் உள்ளார். இந்நிலையில் தான் அவர் ஜெர்மனிக்கு வரும்படி இந்தியர்களை அழைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். திறமையான இந்திய பணியாளர்களை ஜெர்மனிக்கு அழைத்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‛‛ஜெர்மனி தனது புலம்பெயர் கொள்கை, ஐடி, மேலாண்மை, அறிவியல், தொழில்நுட்பத்தில் இந்தியர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில் தனித்து நிற்கிறது. ஜெர்மனியில் பணிபுரியும் இந்தியர், ஜெர்மானியரின் சராசரி வருமானத்தை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள். ஏனென்றால் இந்தியர்கள் ஜெர்மனிக்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இதனால் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி நாங்கள் கடின உழைப்பு, சிறந்த மக்களுக்கு சிறப்பான வேலைகளை வழங்குவதில் நல்ல நம்பிக்கை வைத்துள்ளோம். இது மிகவும் திறமையான அனைத்து இந்தியர்களுக்குமான எனது அழைப்பாகும்'' என்றார். இதன்மூலம் திறமையான இந்தியர்கள் ஜெர்மனி வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று கூறி அதற்கான இணையதள முகவரியையும் வழங்கி உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தானில் நீதிமன்றம் அருகே குண்டு வெடிப்பு: 12 பேர் உயிரிழப்பு
செவ்வாய் 11, நவம்பர் 2025 5:45:34 PM (IST)

ஜப்பானில் பொருளாதார நெருக்கடி: பிரதமர், அமைச்சர்களின் சம்பளத்தை குறைக்க முடிவு!
செவ்வாய் 11, நவம்பர் 2025 11:54:44 AM (IST)

இந்தியா-பாக். போர் நிறுத்தத்துக்கு டிரம்பின் துணிச்சலான தலைமையே காரணம்: ஷபாஸ் ஷெரீப்
திங்கள் 10, நவம்பர் 2025 11:16:26 AM (IST)

அமைதி பேச்சுவார்த்தை தோல்வி - பாகிஸ்தானுடன் போருக்கு தயார்: தலீபான்கள் அறிவிப்பு!
திங்கள் 10, நவம்பர் 2025 10:42:34 AM (IST)

அமெரிக்காவில் வேலைக்குச் செல்வதற்கு இந்தியர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
சனி 8, நவம்பர் 2025 12:37:05 PM (IST)

மெக்சிகோ நாட்டின் அதிபருக்கு பாலியல் தொல்லை: அத்துமீறிய வாலிபர் கைது
வெள்ளி 7, நவம்பர் 2025 12:10:49 PM (IST)




