» செய்திகள் - விளையாட்டு » உலகம்
மாஸ்கோ வரை பாயும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவேன்: ரஷியாவுக்கு டிரம்ப் மிரட்டல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:28:15 AM (IST)
போர் விரைவில் தீர்க்கப்படாவிட்டால், நீண்ட தூர டோமாஹாக் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்ப நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷியாவை எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "பாருங்கள், இந்தப் போர் தீர்க்கப்படாவிட்டால், நான் உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை அனுப்புவேன். டோமாஹாக் ஒரு அற்புதமான ஆயுதம், ரஷ்யா நிச்சயமாக இதை விரும்பவில்லை" என்று கூறினார்.டிரம்பின் எச்சரிக்கைக்கு பதிலளித்த முன்னாள் ரஷிய அதிபரும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ், "உக்ரைனுக்கு டோமாஹாக்ஸ் வழங்கப்பட்டால், அது அனைவருக்கும், குறிப்பாக டிரம்பிற்கு ஒரு பிரச்சனையாக இருக்கும். இது ரஷ்யாவிற்கு அருகில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்புவது போன்ற மற்றொரு வெற்று அச்சுறுத்தலாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.
2,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் டோமாஹாக் ஏவுகணை மூலம் உக்ரைன் ரஷிய தலைநகர் மாஸ்கோவை எளிதில் தாக்க முடியும். இந்த ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதி வேண்டி அமெரிக்காவிடம் உக்ரைன் கோரிக்கை வைத்துள்ள நிலையில் டிரம்ப் உடைய கருத்து வந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கொடூர குற்றவாளிக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய சிறுவன்..!
புதன் 3, டிசம்பர் 2025 5:15:22 PM (IST)

பேச்சுவார்த்தைக்குகூட யாரும் இருக்க மாட்டீர்கள்: ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை!
புதன் 3, டிசம்பர் 2025 12:28:09 PM (IST)

நோபல் பரிசு பெற்ற இந்தியரின் நினைவாக மகனுக்கு சேகர் என்று பெயர் சூட்டிய எலான் மஸ்க்
புதன் 3, டிசம்பர் 2025 8:25:48 AM (IST)

இந்தியாவின் வளர்ச்சிக்கு, நாங்கள் தோளோடு தோளாக... ரஷ்ய அதிபர் மாளிகை..!!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 5:42:52 PM (IST)

இலங்கையில் டிட்வா புயல் பாதிப்பு: சீனா 1 மில்லியன் டாலர் நிதி உதவி அறிவிப்பு
செவ்வாய் 2, டிசம்பர் 2025 12:10:01 PM (IST)

வெளிநாட்டினர் அமெரிக்காவில் புலம்பெயரும் திட்டம் நிறுத்திவைப்பு: டிரம்ப் அறிவிப்பு
திங்கள் 1, டிசம்பர் 2025 4:59:47 PM (IST)


