» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வெளிநாட்டினர் அமெரிக்காவில் புலம்பெயரும் திட்டம் நிறுத்திவைப்பு: டிரம்ப் அறிவிப்பு

திங்கள் 1, டிசம்பர் 2025 4:59:47 PM (IST)

வெளிநாட்டினர் அமெரிக்காவில் புலம் பெயர்வதற்கான தடை நீண்ட காலம் நீடிக்கும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் வெள்ளை மளிகை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது ஆப்கானிஸ்தான் இளைஞர் துப்பாக்கி சூடு நடத்திய விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதனால் பயங்கரவாதிகள் பிடியில் உள்ள நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் புலம் பெயரும் திட்டத்தை நீண்டகாலத்திற்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் அதிபர் ஜோ பைடன் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் எல்லையை கட்டுப்பாடின்றி திறந்துவிட்டதே அமெரிக்காவின் இந்த நிலைமைக்கு காரணம் என்றும் டிரம்ப் குற்றம்சாட்டினார். அமெரிக்காவின் தடைபட்டியலில் ஆப்கானிஸ்தான், சோமாலியா உள்ளிட்ட 19 நாடுகள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory