» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலி
சனி 18, அக்டோபர் 2025 10:46:45 AM (IST)

ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான்–பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லையில் இரு நாட்டு படைகளும் கடுமையாக மோதிக்கொண்டன. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, சண்டை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 48 மணி நேரம் சண்டை நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது.
எனினும், சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்துவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள பக்டிகா மாகாணத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். இதில் 3 பேர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஆவர்.
இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியிருப்பதாவது: "நட்புறவான போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் எல்லையில் உள்ள கிழக்கு பக்டிகா மாகாணத்தில் உள்ள உர்குனில் இருந்து ஷரானாவுக்கு வீரர்கள் பயணம் செய்தனர். பின்னர் உர்குனுக்கு திரும்பிய பிறகு, அவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கோழைத்தனமான இந்த தாக்குதலை நடத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்க இருந்த முத்தரப்பு தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என்று ஆப்கானிஸ்தான் கூறியிருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கொடூர குற்றவாளிக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய சிறுவன்..!
புதன் 3, டிசம்பர் 2025 5:15:22 PM (IST)

பேச்சுவார்த்தைக்குகூட யாரும் இருக்க மாட்டீர்கள்: ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை!
புதன் 3, டிசம்பர் 2025 12:28:09 PM (IST)

நோபல் பரிசு பெற்ற இந்தியரின் நினைவாக மகனுக்கு சேகர் என்று பெயர் சூட்டிய எலான் மஸ்க்
புதன் 3, டிசம்பர் 2025 8:25:48 AM (IST)

இந்தியாவின் வளர்ச்சிக்கு, நாங்கள் தோளோடு தோளாக... ரஷ்ய அதிபர் மாளிகை..!!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 5:42:52 PM (IST)

இலங்கையில் டிட்வா புயல் பாதிப்பு: சீனா 1 மில்லியன் டாலர் நிதி உதவி அறிவிப்பு
செவ்வாய் 2, டிசம்பர் 2025 12:10:01 PM (IST)

வெளிநாட்டினர் அமெரிக்காவில் புலம்பெயரும் திட்டம் நிறுத்திவைப்பு: டிரம்ப் அறிவிப்பு
திங்கள் 1, டிசம்பர் 2025 4:59:47 PM (IST)


