» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த முயல்வது பிரிட்டனுக்கு மிகவும் ஆபத்தானது: ட்ரம்ப் எதிர்ப்பு

வெள்ளி 30, ஜனவரி 2026 4:35:32 PM (IST)

சீனாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த முயல்வது பிரிட்டனுக்கு மிகவும் ஆபத்தாக அமையும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/TrumpUSAPresident_1769771152.jpgஅமெரிக்க அதிபரின் வரி விதிப்பு கொள்கைகளால் உலகின் பல்வேறு நாடுகள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஏற்றுமதியை அதிகம் நம்பி இருக்கும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவுக்கான தங்கள் ஏற்றுமதி குறையுமானால் அதை ஈடுகட்டுவதற்கு ஏற்ப, வேறு நாடுகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் ஆராய்ந்து வருகின்றன. 

ஐரோப்பிய யூனியனில் இணையாத பிரிட்டன், இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் கடந்த ஜூலை 24-ம் தேதி கையெழுத்திட்டது. ஐரோப்பிய யூனியனும், இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளது.

இந்நிலையில், சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரிட்​டன் பிரதமர் கீர் ஸ்டார்​மர், பெய்​ஜிங்​கில் அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசினார். சீன அதிபருட​னான சந்​திப்பு குறித்து லண்​டனில் உள்ள பிரதமர் அலு​வல​கம் வெளி​யிட்​ட அறிக்​கை​யில், "இரு நாடு​களுக்​கும் பயனளிக்​கும் வகை​யில் சீரான, நீண்டகால மற்​றும் வியூக ரீதியி​லான கூட்​டாண்​மையை உரு​வாக்க இரு நாட்டு தலை​வர்​களும் உறுதிபூண்டுள்ளனர். கருத்து வேறு​பாடு​கள் உள்ள துறைகளில் வெளிப்​படை​யான பேச்​சு​வார்த்​தையைத் தொடர அவர்​கள் ஒப்​புக்​கொண்​டனர். பரஸ்பர நலன் சார்ந்த துறை​களில் ஒத்​துழைப்பை அதி​கரிக்​க​வும் இந்த சந்​திப்​பின்​போது உடன்​பாடு எட்​டப்​பட்​டது” என்று தெரிவிக்கப்பட்டது.

பிரிட்டன் பிரதமரின் சீன பயணம் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், "அப்படி செய்வது அவர்களுக்கு மிகவும் ஆபத்தானது” என தெரிவித்துள்ளார். எனினும், இது குறித்து அவர் விவரிக்கவில்லை.

கனடா பிரதமர் மார்க் கார்னி, சமீபத்தில் சீனா சென்று அந்நாட்டுடன் பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொண்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டொனால்டு ட்ரம்ப், கனடா மீது வரிகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்தினார். இந்நிலையில், பிரிட்டனின் நடவடிக்கை குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேநேரத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு குறித்துப் பேசிய கீர் ஸ்டார்மர், ‘‘சந்திப்பு மிகவும் சுமுகமாக இருந்தது. நாங்கள் எதிர்பார்த்த விளைவுகளை வழங்கியுள்ளது. சில உண்மையான முன்னேற்றங்களை எட்டியுள்ளோம். ஏனெனில், வழங்குவதற்கு இங்கிலாந்திடம் நிறைய இருக்கிறது. விசா இல்லாத பயணம், விஸ்கி மீதான வரி குறைப்பு என முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. உறவை மேம்படுத்த நாங்கள் என்ன செய்கிறோம் என்பதற்கு இவைதான் அடையாளம். பரஸ்பர நம்பிக்கையையும் மரியாதையையும் உருவாக்கும் வழியாக இந்த சந்திப்பை நாங்கள் பார்க்கிறோம்.” என தெரிவித்தார்.

சீனா செல்லும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கீர் ஸ்டார்மர், ‘‘அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்றி உள்ளேன். எனவே, ட்ரம்ப்பை கோபப்படுத்தாமல் சீனாவோடு பொருளாதார உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்த பிரிட்டனால் முடியும்’’ என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory