» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியப் பாரம்பரிய உடையில் பிரதமர் மோடியை ஆச்சரியப்படுத்திய நெதன்யாகு!
வியாழன் 26, பிப்ரவரி 2026 4:57:04 PM (IST)

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியப் பாரம்பரிய உடையணிந்து உற்சாக வரவேற்பு அளித்தார்.
பிரதமர் மோடி நேற்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இஸ்ரேலுக்குப் புறப்பட்டார். அவருடன் உயர்மட்டக் குழுவினரும் சென்றிருந்தனர். இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த அவரை, அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா நெதன்யாகு ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர். பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டிற்குப் பயணம் மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும்.
நேற்று மாலை இஸ்ரேல் நாடாளுமன்றமான 'நெசெட்'-டில் (Knesset) பிரதமர் மோடி உரையாற்றினார். இதன் மூலம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றார். அவரது உரைக்குப் பிறகு, அவருக்கு அந்நாட்டின் உயரிய 'நெசெட் சபாநாயகர்' பதக்கம் வழங்கப்பட்டது. இதனை நாடாளுமன்றச் சபாநாயகர் அமீர் ஒகானா வழங்கிக் கௌரவித்தார். இந்தப் பதக்கத்தைப் பெறும் முதல் இந்தியப் பிரதமரும் மோடியே ஆவார்.
நேற்றிரவு பிரதமர் மோடிக்கு, நெதன்யாகு சிறப்பு விருந்து அளித்தார். அப்போது, தனது நண்பரான மோடியை ஆச்சரியப்படுத்தும் விதமாக, நெதன்யாகு இந்தியாவின் பாரம்பரிய உடையை அணிந்து வந்து அவரை வரவேற்றார்.

இது குறித்து நெதன்யாகு தனது 'எக்ஸ்' (X) வலைதளப் பக்கத்தில் இந்தியில் பதிவிட்டுள்ளதாவது: "எங்களது இரவு விருந்துக்கு முன்னதாக, இந்தியாவின் பாரம்பரிய உடையை அணிந்து எனது நண்பர் பிரதமர் மோடியை நான் ஆச்சரியப்படுத்தினேன்."
இப்பயணத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் ஜனாதிபதி ஈசாக் ஹெர்ஜோக்கையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார். மேலும், இஸ்ரேலில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து அவர்களிடையே உரையாடவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெனிசுலாவை அமெரிக்காவுடன் இணைக்க டிரம்ப் திட்டம்: அதிபர் டெல்சி நிராகரிப்பு!
புதன் 13, மே 2026 12:37:18 PM (IST)

அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள்; ஈரானிடம் கடற்படையே இல்லை - டிரம்ப் ஆவேசம்!
புதன் 13, மே 2026 11:43:59 AM (IST)

தமிழகம் - மலேசியா உறவு பலப்படும்: விஜய்க்கு மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் வாழ்த்து
செவ்வாய் 12, மே 2026 11:57:47 AM (IST)

ட்ரம்ப் விதித்த 10% இறக்குமதி வரி செல்லாது: அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு
சனி 9, மே 2026 10:30:31 AM (IST)

சுற்றுலா கப்பலில் ஹண்டா வைரஸ் பீதி: 3 பேர் அவசரமாக மருத்துவமனைக்கு மாற்றம்!
வியாழன் 7, மே 2026 4:55:52 PM (IST)

ஹார்முஸ் ஜலசந்தியில் போர் நிறுத்தம்? - ஈரானுடன் ஒப்பந்தம் செய்யத் தயாராகும் டிரம்ப்..!
புதன் 6, மே 2026 11:40:28 AM (IST)


