» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கரன்சி நோட்டுகளை ஏற்றிச் சென்ற ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது - 15 பேர் பலி
சனி 28, பிப்ரவரி 2026 5:03:54 PM (IST)

பொலிவியா நாட்டின் எல் ஆல்டோ (El Alto) நகரில் கரன்சி நோட்டுகளை ஏற்றிச் சென்ற ராணுவ சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பொலிவியா அரசுக்குச் சொந்தமான கரன்சி நோட்டுகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட இந்த ராணுவ விமானம், எல் ஆல்டோ விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்தது. ஓடுபாதையில் தரை இறங்கும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விமானம் நிலைதடுமாறி அருகிலிருந்த மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார்களும் நசுங்கி பலத்த சேதமடைந்தன.
இந்த கோர விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விமானம் விழுந்து நொறுங்கிய வேகத்தில், அதில் கொண்டு செல்லப்பட்ட கட்டுக்கட்டான கரன்சி நோட்டுகள் சாலை எங்கும் சிதறி விழுந்தன. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, அங்குக் கூடியிருந்த மக்கள் சிதறிக்கிடந்த பணத்தை போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்ற காட்சி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ராணுவத்தினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, மீதமுள்ள பணத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெனிசுலாவை அமெரிக்காவுடன் இணைக்க டிரம்ப் திட்டம்: அதிபர் டெல்சி நிராகரிப்பு!
புதன் 13, மே 2026 12:37:18 PM (IST)

அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள்; ஈரானிடம் கடற்படையே இல்லை - டிரம்ப் ஆவேசம்!
புதன் 13, மே 2026 11:43:59 AM (IST)

தமிழகம் - மலேசியா உறவு பலப்படும்: விஜய்க்கு மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் வாழ்த்து
செவ்வாய் 12, மே 2026 11:57:47 AM (IST)

ட்ரம்ப் விதித்த 10% இறக்குமதி வரி செல்லாது: அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு
சனி 9, மே 2026 10:30:31 AM (IST)

சுற்றுலா கப்பலில் ஹண்டா வைரஸ் பீதி: 3 பேர் அவசரமாக மருத்துவமனைக்கு மாற்றம்!
வியாழன் 7, மே 2026 4:55:52 PM (IST)

ஹார்முஸ் ஜலசந்தியில் போர் நிறுத்தம்? - ஈரானுடன் ஒப்பந்தம் செய்யத் தயாராகும் டிரம்ப்..!
புதன் 6, மே 2026 11:40:28 AM (IST)


