» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஈரானின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி
வியாழன் 26, மார்ச் 2026 10:29:35 AM (IST)
ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை ஒரு 'புற்றுநோய்' என விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலகப் பாதுகாப்பிற்காக அந்த அச்சுறுத்தலுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக ஈரான், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் மேற்காசிய பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது.அமெரிக்காவின் 15 அம்ச அமைதித் திட்டம்:
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா 15 அம்சங்கள் கொண்ட புதிய திட்டத்தை வகுத்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் எகிப்து நாட்டு அதிகாரிகள் மூலம் ஈரானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முழுமையாகக் கைவிடுதல்.
நீண்ட தூர ஏவுகணைத் திட்டங்கள் மீது கட்டுப்பாடு.
ஆயுதக் குழுக்களுக்கு வழங்கி வரும் ஆதரவை நிறுத்துதல்.
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறத்தல்.
இதற்குப் பகரமாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குதல்.
ஈரானின் பிடிவாதம்: இருப்பினும், இந்த நிபந்தனைகளை ஏற்க ஈரான் மறுத்து வருகிறது. குறிப்பாக, தனது பாதுகாப்புக்கு ஆதாரமாக விளங்கும் ஏவுகணைத் திட்டம் மற்றும் ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும், ஹார்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்கவும் ஈரான் முன்வரவில்லை.
அதிபர் டிரம்பின் எச்சரிக்கை: இது குறித்துப் பேசிய அதிபர் டிரம்ப், "கடந்த 47 ஆண்டுகளில் எந்த அமெரிக்க அதிபரும் செய்யத் துணியாததை நாங்கள் செய்துள்ளோம். ஈரானின் அணு ஆயுத மிரட்டல் எனும் புற்றுநோயை அறுவை சிகிச்சை செய்து அகற்றி வருகிறோம். இந்தப் பணியை முழுமையாக முடித்து ஈரானின் அச்சுறுத்தலை ஒழிப்போம்" என்று உறுதியாகத் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகை அறிக்கை: "கடந்த மூன்று நாட்களாக ஈரானின் மின் கட்டமைப்புகளைத் தாக்காமல் அமெரிக்கா ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு வழிவகை செய்துள்ளது. ஆனால், ஈரான் தற்போதைய எதார்த்தத்தை உணரத் தவறினால், இதுவரை கண்டிராத மிகக் கடுமையான தாக்குதலைச் சந்திக்க நேரிடும். அதிபர் டிரம்ப் வெறும் மிரட்டல் விடுப்பவர் மட்டுமல்ல," என்று வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.
மத்தியஸ்தர்கள் மூலம் ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம் தான் நிற்கும் : உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி உறுதி!
வியாழன் 18, ஜூன் 2026 11:18:03 AM (IST)

உலக அளவில் நிம்மதி: அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்! எண்ணெய் விநியோகம் சீராகும்!
திங்கள் 15, ஜூன் 2026 3:52:24 PM (IST)

அமெரிக்கா - ஈரான் இடையே சமரச தூதராகப் பாகிஸ்தான் வெற்றி: ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
ஞாயிறு 14, ஜூன் 2026 1:13:05 PM (IST)

இந்திய கப்பல்கள் மீதான தாக்குதலைத் திசைதிருப்ப டிரம்ப் முயற்சி: ஈரான் பகிரங்கக் குற்றச்சாட்டு!
சனி 13, ஜூன் 2026 12:02:06 PM (IST)

இந்திய மாம்பழங்களின் இறக்குமதிக்கு எந்தவிதத் தடையும் இல்லை: நேபாள அரசு விளக்கம்!
வெள்ளி 12, ஜூன் 2026 10:52:52 AM (IST)

ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான் ராணுவம்: மீறும் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு..!
வியாழன் 11, ஜூன் 2026 5:27:20 PM (IST)


