» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவின் அழுத்தத்தையும் மீறி கமேனி இறுதிச் சடங்கில் பங்கேற்பு: இந்தியாவுக்கு ஈரான் நன்றி!

புதன் 8, ஜூலை 2026 12:43:48 PM (IST)

IranFuneralINdia.jpg

ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற இந்திய அரசிற்கும், இந்திய மக்களுக்கும் ஈரான் நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘தஸ்னிம்’ தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது.

மறைந்த ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு அந்நாட்டுத் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்றது. இச்சம்பவம் குறித்துத் தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கமேனியின் இறுதிச் சடங்கில் உலக நாடுகள் யாரும் பங்கேற்கக் கூடாது என அமெரிக்கா கடுமையான அழுத்தத்தைக் கொடுத்தது. இந்த அச்சுறுத்தல் காரணமாக, இறுதி நேரத்தில் 13 நாடுகள் தங்களது முடிவை மாற்றிக்கொண்டு இறுதிச் சடங்கில் பங்கேற்பதைத் தவிர்த்தன" எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவிற்கு நன்றி: மேலும் அந்த அறிக்கையில், "அமெரிக்காவின் இத்தகைய அழுத்தங்களையும் மீறி, எங்களது உச்ச தலைவரின் இறுதிச் சடங்கில் நேரில் பங்கேற்று எங்களது துயரத்தில் பங்கெடுத்த இந்திய அரசிற்கும், அந்நாட்டு மக்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory