» செய்திகள் - விளையாட்டு » உலகம்

துபாய் இந்தியத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடல்: பாஸ்போர்ட், விசா சேவைகள் நிறுத்தம்!

வெள்ளி 17, ஜூலை 2026 12:53:31 PM (IST)

embassyINdiauae.jpg

துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் நடைபெறும் சாலைப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தூதரகம் தற்காலிகமாக மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் துணைத் தூதரகம் ஜூலை 17 முதல் ஜூலை 19 (ஞாயிற்றுக்கிழமை) வரை மூன்று நாட்களுக்கு முழுமையாக மூடப்பட்டிருக்கும். இதன் காரணமாகப் பாஸ்போர்ட், விசா மற்றும் ஆவணச் சான்றொப்பம் (Attestation) உள்ளிட்ட சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. இச்சேவைகள் மீண்டும் ஜூலை 20 (திங்கட்கிழமை) முதல் வழக்கம்போல் செயல்படத் தொடங்கும். இதற்கான ஆன்லைன் முன்பதிவுகள் ஜூலை 19 அன்று இரவு 8:00 மணி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்கள் தூதரகம் மூடப்பட்டிருக்கும் காலத்தில், அவசரத் தேவைகளுக்கான பாஸ்போர்ட், விசா மற்றும் சான்றொப்பச் சேவைகளைப் பெற விரும்புவோர் அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரக வளாகத்தை அணுகலாம் எனத் துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் வழக்கம்போல் செயல்படும்.

அமீரகத்தில் தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் தாய்நாடு திரும்பத் திட்டமிட்டுள்ள இந்தியர்கள் இந்த தற்காலிக மாற்றத்திற்கேற்பத் தங்களது பயணத் திட்டங்களை அமைத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory