» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஓட்டை, உடைசல் அரசு பேருந்துகளை மாற்ற நடவடிக்கை : பயணிகள் கோரிக்கை!
சனி 18, நவம்பர் 2023 3:16:11 PM (IST)

நாசரேத்திற்கு இயக்கப்படும் ஓட்டை, உடைசல் அரசு பேருந்துக ளை மாற்றி நல்ல கன்டிசனில் இயங்கும் பேருந்துகளை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் வழித்தடத்தில் ஓடக்கூடிய அனைத்து அரசு பேருந்துகளும் பழைய இரும்புக்கு பேரிச்சம்பழம் என்ற கணக்கில் தான் ஓடுகிறது. மேலும் வேறு வழித்தடங்களில் இயக்க முடியாமல் விட்டு விட்டு சென்ற பேருந்துகளையே இந்த வழித்தடத்தில் இயக்குகிறார்கள். இது குறித்து பலமுறை கேள்வி கேட்டும் எந்த பயனும் இல்லை. நாசரேத்திற்கு என்று கேட்டு வாங்கிய வந்த பேருந்துகளையும் கொடுப்பதில்லை.
இதற்கு எல்லாம் காரணம் இந்த பகுதியில் ஓடக்கூடிய தனியார் பேருந்துகளின் ஆதிக்கமே என்று பேசப்படுகிறது. தனியார் பேருந்துகள் ரதம் மாதிரி இயக்கப்படுகிறது. ஆனால் இந்த பகுதியில் ஓடக்கூடிய அரசு பேருந்துகள் ஓடுவதற்கு தகுதியற்ற பேருந்துகளை இயக்குகிறார்கள்.
ஆகவே தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் அரசு போக்குவரத்து கழகத்தை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நாசரேத் வழித்தடத்தில் நல்ல நிலையில் இயங்கக் கூடிய பேருந்து களை இயக்கி வசூலை கூட்ட நடவடிக்கை எடுக்கவும், இலவசமாக இயக்கக்கூடிய நகரப் பேருந்துகள் அனைத்தும் நாசரேத்துக்கு இயக்கப்படுகின்றன. அதிக அளவில் இது தமிழக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதுடன் வரக்கூடிய எம்.பி., தேர்தலில் இதனுடைய ரிசல்ட் எதிரொலிக்கும் என்றும் பொதுமக்கள் பேசிக் கொள்கின்றனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நலவாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் : ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக்குழு கூட்டம்
செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:18:52 PM (IST)

மக்களவைத் தோ்தலில் சமக தனித்து போட்டியா? டிச.9 இல் சரத்குமார் அறிவிப்பு!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:15:47 PM (IST)

நெல்லை டவுனில் வாலிபர் வெட்டி கொலை: மேலும் இருவா் கைது
செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:12:30 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள்: நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 4:02:13 PM (IST)

மாநில யோகா போட்டி: ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவர் முதலிடம்!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 3:53:50 PM (IST)

கடலில் தவறிவிழுந்து மீனவர் உயிரிழப்பு: குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி!
திங்கள் 4, டிசம்பர் 2023 4:58:43 PM (IST)

ஓட்டு போட்ட முட்டாள்Nov 18, 2023 - 05:00:22 PM | Posted IP 162.1*****