» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கணவருடன் மொபட்டில் சென்ற பெண் தவறி விழுந்ததில், பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாப சாவு

ஞாயிறு 19, நவம்பர் 2023 8:55:46 AM (IST)

நெல்லையில் கணவருடன் மொபட்டில் சென்ற பெண் தவறி விழுந்ததில், பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

நெல்லை பாளையங்கோட்டை டி.வி.எஸ். நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் ( 65). இவருடைய மனைவி சைலஜா (62). இவர்கள் இருவரும் சேரன்மாதேவி அருகே இடையன்குளத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றனர். பின்னர் நேற்று காலையில் அங்கிருந்து மொபட்டில் நெல்லைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் வந்தபோது, அவர்களுக்கு முன்பாக சென்ற அரசு பஸ் திடீரென்று புதிய பஸ் நிலையத்துக்குள் திரும்பியது. இதனால் சோமசுந்தரம் மொபட்டை நிறுத்த முயன்றார். இதில் மொபட்டில் பின்னால் அமர்ந்திருந்த சைலஜா நிலைதடுமாறி சாலையில் தவறி விழுந்தார்.

அப்போது அவர்களுக்கு பின்னால் நெல்லை சந்திப்பில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு வந்த மற்றொரு பஸ்சின் சக்கரத்தில் சிக்கியதில் சைலஜா தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சாலையில் தவறி விழுந்ததில் காயமடைந்த சோமசுந்தரம், இறந்த மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார்.

தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சைலஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சோமசுந்தரத்தை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த சைலஜாவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory